பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

மிகவும் மரியாதைக்குரிய,என் அன்பான பிரதமர் நரேந்திர மோடி ஜி,உங்கள் பிறந்தநாளில் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நமது அன்பான தேசத்தை வழிநடத்தும் நித்திய பலம் கிடைக்க வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த்

ஆதார் கட்டணம் அக்.1 முதல் உயர்கிறது

ஆதாரில் தகவல்களை மாற்றுவதற்கான கட்டணம் அக்.1 முதல் உயர்கிறது. ஆதாரில் புகைப்படத்தை மாற்ற கட்டணம் ₹100ல் இருந்து ₹125-ஆகவும், மற்ற தகவல்களை மாற்றுவதற்கான கட்டணம் ₹50ல் இருந்து ₹75-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக ஆதாருக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது

நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள்

தனியார் வானிலை ஆய்வாளர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கிழக்கு இந்திய பெருங்கடல், தென் சீனக்கடல் பகுதிகளில் நிலையான அலைவாக நீடித்து வடகிழக்கு பருவமழைக்கு சாதகமாக அமையும். அதுமட்டுமல்லாமல், வெப்பமண்டல காற்று குவிதல் இந்தாண்டு தமிழகம் மற்றும் இலங்கை அட்சரேகை அருகிலேயே நீண்ட நாட்கள் நீடித்து அடுத்தடுத்து நிகழ்வுகளை தமிழகம் நோக்கி நகரச்செய்யும். இதனால் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 20 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை அதிகமாக பதிவாகும்’ என தெரிவித்துள்ளார். மேலும், தாழ்வுப்பகுதி, மண்டலம், […]

மேக்சி கேப் வேன்களுக்குமினி பேருந்து அனுமதி

மேக்சி கேப் வேன்களை மினி பேருந்துகளாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து உள்ளது 25 கி.மீ வழித்தடத்தில் இந்த வேன்களை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர் கிராமங்களில் பொதுப்போக்குவரத்தை எளிமைப்படுத்த முதற்கட்டமாக 2,000 வேன்களை மினி பேருந்துகளாக இயக்க திட்டமிட்டு உள்ளனர் வேன்களை மினி பஸ்களாக இயக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அனுமதி பெறலாம்

லெக்பீஸ் இல்லாத கோழியா?ஓட்டலுக்கு ரூ 10 ஆயிரம் அபராதம்

கோவை ஜி.கே.எஸ். அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் எடிசன். இவர் கோவை : நுகர்வோர் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- கோவை உப்பிலிபாளையம் மெயின்ரோட்டில் | மணிகண்டன் என்பவர் நடத்தி வந்த பிரியாணி : கடைக்கு கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி குடும் பத்தினருடன் சாப்பிட சென்றேன். தந்தூரி சிக்கன் மற்றும் முழு பொரித்த கோழிக்கு(கிரில் சிக்கன்) ஆர்டர் செய்தேன் பரிமாறப்பட்ட பொரித்த கோழியில் ‘லெக்பீஸ்’ துண்டு எங்கே? என்று கேட் […]

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு காரணம் இதுவா? காங்கிரஸ்

மத்திய பாஜக அரசின் ஜி.எஸ்.டி. வரி குறைப்புக்கு பின்னால் இருப்பது பீகார் தேர்தலா? என காங்கிரஸ் கேள்வி கடந்த 8 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் கண்ணீர் விட்டு கதறியும் கேளாத காதுகள், தற்போது வழிக்கு வந்திருப்பது யோசிக்க வைப்பதாகவும் சந்தேகம்.

வீட்டு மின் பொருட்கள் மலிவு!

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு 22 முதல் அமுலாகிறத. இதனால் ஏ.சி டி.வி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் – எல்லாம் 28% லிருந்து 18% ஆக குறைக்கப்படுகிறது. இதே போல உரம் விலையும் குறைகிறது.

குற்றால அருவியில் குளிக்க தடை

குற்றாலத்தில் தொடர்ந்து சீசன் நிலவுகிறது நேற்று இரவு அந்த பகுதிகளில் மழை பெய்தது. தொடர்ந்து குற்றால அருவிகளில் வெள்ளம் கொட்டியது .இதன் காரணமாக பொதுமக்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விகித்தனர்

இளம்பெண் பாலியல் வன்கொடுமை – கோவில் பூசாரி மீது வழக்கு

தீய சக்திகளை அழிக்க ருத்ராட்ச மணிகளைதருவதாகக் கூறி இளம்பெண்ணை அழைத்துச் சென்று கோவில் பூசாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் செய்யப்பட்டு உள்ளது இளம் பெண்ணின் கணவர் தன்னை தாக்கிரூ.10 லட்சம் கேட்டு மிரட்டுவதாக பூசாரிஅசோக் பாரதி தரப்பில் காவல் நிலையத்தில் புகார் பாலியல் வன்கொடுமை விவகாரத்தை தன் கணவரிடம் இளம்பெண் கூறவே, அவர் பூசாரியை தாக்கியது தெரிய வந்துள்ளது பூசாரி அசோக் பாரதி முன்கூட்டியே வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் அம்பலம்

குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி சுரங்க பாலம் அமைக்க கோரி போராட்டம்

குரோம்பேட்டையில் வைஷ்ணவா கல்லூரி அருகே சுரங்க ரயில் பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. குரோம்பேட்டை ராதாநகர், வைஷ்ணவா கல்லூரி ரயில்வே கேட்டுக்களுக்கு கிழக்குப்பகுதியில் சுமார் 3 லட்சம் ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து ரயில்வே கேட்டுக்களை காரணம் சொல்லி நிறுத்தப்பட்டுவிட்டது.இதனால் இம்மக்கள் தனியார் வாகனங்களை நம்பி உள்ளனர். தினமும் குறிப்பிட்ட தொகையை செலவழிக்கும் நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல், ரயில் தண்டவாளத்தை […]