ரேபிடோ டிரைவர் மீது வன்கொடுமை புகார்

சென்னை, வானகரத்தில் ரேபிடோ டிரைவர் மீது திரிபுரா பெண் வன்கொடுமை புகார் அளித்தார் “2 லட்சம் கேட்டு மிரட்டினார் தராததால், வன்கொடுமை செய்ததாக புகார். கூறினார். ஆனால் இருவரும் உடன்பட்டுதான் உடலுறவு மேற்கொண்டோம்” என்றுரேபிடோ டிரைவர் கூறினார்

காபி ,டீ விலை குறையுமா ?

மத்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி பரிமாற்றம் இன்று அமலுக்கு வந்துவிட்டது இதில் பல நிறுவனங்கள் தங்களது விலையை குறைத்து அறிவித்துவிட்டன சில நிறுவனங்கள் விலையை குறைக்காமல் 20% இலவசம் என்று கூறி வருகின்றன. பால் பொருட்கள், ,தேயிலை சர்க்கரை போன்றவற்றுக்கும் வரி மாற்றம் செய்யப்பட்டு குறைந்துள்ளது. இதன் காரணமாக கடைகளில் டீ, காபி விலை குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்:

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய 2 ‘வந்தே பாரத்’ சரக்கு ரயில்கள் (வந்தே ப்ரைட்) தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎஃப் வளாகத்தில் நிறைவடைந்துள்ளதை அடுத்து வரும் நவம்பரில் இயக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் ஐசிஎஃப்-இல் ஆண்டுக்கு சுமாா் 4,000-க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நாட்டிலேயே முதல்முறையாக விமானங்களில் சரக்குகளை ஏற்றுவதற்கான வசதிகளை உள்ளடக்கிய சரக்கு ரயில் பெட்டிகளுடன் கூடிய 2 சரக்கு ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2018 -ஆம் ஆண்டு ‘வந்தே […]

திருச்சி – டெல்லி நேரடி விமான சேவை துவக்கம்.

திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி தினசரி விமான சேவையை இன்டிகோ நிறுவனம் தொடங்கி உள்ளது. காலை 6 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 9.15 மணிக்கு டெல்லியை அடையும். டெல்லியில் இருந்து மதியம் 2.10க்கு புறப்பட்டு மாலை 5.25க்கு திருச்சி வரும்

ஆயுத பூஜை ” தீபாவளியை ஒட்டி தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்.*

ஆயுத பூஜை தீபாவளியை ஒட்டி செப்டம்பர். 28 முதல் அக்டோபர். 26 வரை அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் நாகர்கோயில்- தாம்பரம் சிறப்பு ரயில். விடப்படுகிறது செப்.29- அக். 27 வரை திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோயிலுக்கு சிறப்பு ரயில் இயக்கம். செப். 25 முதல் அக். 23 வரை வியாழக்கிழமைகளில் சென்னை – கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில்.. மறுமார்க்கத்தில் செப்.26, முதல் அக். 24 வரை வெள்ளிக்கிழமைகளில் சென்னைக்கு சிறப்பு ரயில். செப். 23 முதல் […]

கண்ணீர் வடிக்கும் ஐடி ஊழியர்கள்.

புகழ் பெற்ற டிசிஎஸ் நிறுவனத்தில் ஒரு பெண் ஊழியர் வேலை விட்டு நீக்கப்படுகிறார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில் அந்த நிறுவனம் தனக்கு மன உளைச்சலை தருவகையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டியுள்ளார் “உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் தருகிறோம், ஒன்று நீங்களே தனிப்பட்ட காரணம் என கூறி வேலையை ராஜினாமா செய்துவிடுங்கள் 3 மாத சம்பளத்தோடு உங்களுக்கு ராஜினாமா கிடைக்கும், இல்லை என்றால் நாங்கள் உங்கள் மீது நெகடிவ் கடிதம் கொடுத்து வேலையை விட்டு நீக்குவோம்”என்று அந்த […]

165 பயணிகளுடன் சென்ற விமானத்தில் கோளாறு

சென்னையில் இருந்து 165 பயணிகளுடன்பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட அவசர அவசரமாக மீண்டும்சென்னையில் தரையிறங்கிய விமானம் மாற்று விமானம் ஏற்பாடு செய்து பயணிகள்பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

மிகவும் மரியாதைக்குரிய,என் அன்பான பிரதமர் நரேந்திர மோடி ஜி,உங்கள் பிறந்தநாளில் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நமது அன்பான தேசத்தை வழிநடத்தும் நித்திய பலம் கிடைக்க வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த்

ஆதார் கட்டணம் அக்.1 முதல் உயர்கிறது

ஆதாரில் தகவல்களை மாற்றுவதற்கான கட்டணம் அக்.1 முதல் உயர்கிறது. ஆதாரில் புகைப்படத்தை மாற்ற கட்டணம் ₹100ல் இருந்து ₹125-ஆகவும், மற்ற தகவல்களை மாற்றுவதற்கான கட்டணம் ₹50ல் இருந்து ₹75-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக ஆதாருக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது

நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள்

தனியார் வானிலை ஆய்வாளர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கிழக்கு இந்திய பெருங்கடல், தென் சீனக்கடல் பகுதிகளில் நிலையான அலைவாக நீடித்து வடகிழக்கு பருவமழைக்கு சாதகமாக அமையும். அதுமட்டுமல்லாமல், வெப்பமண்டல காற்று குவிதல் இந்தாண்டு தமிழகம் மற்றும் இலங்கை அட்சரேகை அருகிலேயே நீண்ட நாட்கள் நீடித்து அடுத்தடுத்து நிகழ்வுகளை தமிழகம் நோக்கி நகரச்செய்யும். இதனால் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 20 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை அதிகமாக பதிவாகும்’ என தெரிவித்துள்ளார். மேலும், தாழ்வுப்பகுதி, மண்டலம், […]