டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புள்ள தீவிரவாத இயக்கம்
டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று 42 முக்கிய தடயங்களை சேகரித்தனர்.
2026 எப்படியிருக்கும் : பாபா வங்கா கணிப்பு!
உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை முன்கணித்து, அவற்றில் பல அப்படியே நடந்தும் இருப்பதால், பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா என்ற பெண்ணின் கணிப்புகள் மீது பெரிய அளவில் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. சிறு வயதில் கண் பார்வையை இழந்த பாபா வங்காவுக்கு, உலகில் நடக்கும் பல விஷயங்களை முன் கணிக்கும் ஆற்றல் கிடைத்தது. அவற்றை அவர் ஏற்கனவே பதிவு செய்திருந்த நிலையில், கடந்த 1996ஆம் ஆண்டே பாபா வங்கா மரணம் அடைந்துவிட்ட போதும், அவரது கணிப்புகள் சாகா வரம் […]
கிண்டி கத்திப்பாரா பாலத்தின் மேல் 101 அடி உயரத்தில் மெட்ரோ கட்டுமான பணி
சென்னையில் 2-ம் கட்டமாக நடந்து வரும் 3 மெட்ரோ வழித்தடங்களில், மாதவரம்-சோழிங்கநல்லுார் இடையே 47 கி.மீ., தூரத்துக்கு 46 ரெயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் மேம்பால பாதைக்காக 320-க்கும் மேற்பட்ட தூண்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ள இடங்களில், மேம்பாலம் இணைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த தடத்தில், கிண்டி கத்திப்பாராவில் இருந்து 1,354 அடி தூரத்துக்கு மேம்பால பாதையில் பிரமாண்டமாக ரெயில் பாதை 101 […]
பிகாரில் குளத்தில் குதித்து மீன்பிடித்த ராகுல்
பிஹாரில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. கடுமையான தேர்தல் பணிகளுக்கு இடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெகுசராய் என்ற இடத்தில் உள்ளூர் மக்களுடன் இணைந்து குளத்தில் இறங்கி மீன்டிபிடித்து மகிழ்ந்தார். படகு மூலமாக குளத்துக்குள் சென்ற ராகுல் தண்ணீரில் குதித்து நீச்சல் அடித்தார். அப்போது விகாஸ்ஷீல் கட்சியின் (விஐபி) நிறுவனர் முகேஷ் சாஹ்னி உடனிருந்தார்.
பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டை
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டை வழங்குவதை பல அரசு ஆஸ்பத்திரிகள் செயல்படுத்தி வருகின்றன. இதை பல ரெயில்வே ஆஸ்பத்திரிகளும் செய்து வருகின்றன. அந்தவகையில் தென்கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் முதல் முறையாக ஜார்கண்ட் சக்ரதார்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டு உள்ளது. மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள இந்த ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் பிறந்த 4 குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டையும், பிறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் வெப்பநிலை உயர வாய்ப்பு
கிழக்கு திசை காற்று தடைபட்டு தற்போது வறண்ட மேற்கு திசை காற்று வீசுகிறது மேலும் கடல் காற்று உள் நுழைவதும் தடை பட்டதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்திருக்கிறது.இன்று முதல் தமிழ்நாட்டின் வெப்பநிலை இயல்பை விட 4°©️ வரை உயரும் என கணிக்கப்படுகிறது. குறிப்பாக சென்னை முதல் குமரி வரை உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும். அடுத்த 5 நாட்களுக்கு சென்னை மதுரை திருச்சி நெல்லை விருதுநகர் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் […]
வீடு தேடி வரும் ரேஷன் பொருள் – வயது வரம்பு குறைப்பு
தமிழக அரசு தாயுமானவன் என்ற திட்டத்தின் கீழ் முதியோர் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டு வருகிறது தற்போது எந்த வயது வரம்பை குறைத்து 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வீட்டுக்குச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது
வணிக சிலிண்டர் விலை குறைப்பு
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1,750-க்கு விற்பனை வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இன்றி ரூ.868.50க்கு விற்பனை செய்யப்படுகிறது
ஆலந்தூரில் ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்டு நிலம் மீட்பு பிரபல ஒட்டல் கட்டிடத்திற்கு சீல் வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் புனிததோமையார் மலை கிராமத்தில் சர்வே எண் 146/2 ல் 15 கிரவுண்ட் அரசு நிலம் குத்தகை காலம் முடிந்து பின்னரும் வணிக ரீதியான கட்டிடம் செயல்ப்ட்டு வந்ததால் செங்க்ல்பட்டு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தத்து. ஆனால் நிலம் தொடர்பான வழக்கு ஆலந்தூர் உரிமையியல் நிதிமன்றத்தில் நடந்தது. இதில் நிலம் அரசுக்கு ஒப்ப்டைக்க தீர்ப்புப்வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா உத்திரவின் பேரில் வட்டாட்சியர்கள் ஆறுமுகம், நடராஜன் ஆகியோர் தலைமையில் வருவாய் துறையினர் […]
மோன் தா புயலால் சென்னைக்கு பாதிப்பு இல்லை
வங்கக் கடலில் நிலவி வரும் ‘மோன்தா’ தீவிரப் புயல் காரணமாக சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 6 துறைமுகங்களில் நேற்று ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது.புயல் ஆந்திராவை நோக்கி செல்வதால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை சென்னையில் மட்டும் காலையில் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது