ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம்!
ஜப்பானை பின்னுக்குத்தள்ளி, உலகின் 4 வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. இதே வேகத்தில் சென்றால், 2030ஆம் ஆண்டிற்குள் ஜெர்மனியை முந்தும் நிலையை இந்தியா எட்டும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2025 : இந்தியாவின் வளர்ச்சியை வரையறுக்கும் ஆண்டு என்ற தலைப்பில் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.18 டிரில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜப்பானை பின்னுக்குத்தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. […]
பான் கார்டு – ஆதார் இணைப்பு இன்றே கடைசி நாள்
PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே (31.12.25) கடைசி நாள் என வருமான வரித் துறை அறிவித்து உள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இன்றைக்குள் ரூ.1,000 தாமதக் கட்டணம் செலுத்தி இணைக்க வேண்டும். இணைக்கத் தவறினால் PAN எண் செல்லாது என்று அறிவிக்கப்படும் என வருமான வரித் துறை எச்சரிக்கை.எடுத்துள்ளது.
பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவின் 2ஆவது ஏவுதளத்தில் இருந்து பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. தொலைதூரப் பகுதிக்கு கைப்பேசி இணைப்பு, அதிவேக 5ஜி இணையதள சேவை வழங்க இந்த செயற்கைக்கோள் உதவும். இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோள்களில் மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோளாக இது இருக்கும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட AST SpaceMobile நிறுவனம், செயற்கைக்கோள் மூலம் 4ஜி, 5ஜி இணையச் சேவை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.
வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது எல்விஎம்-3 எம்6 ராக்கெட்
அமெரிக்க செயற்கைக்கோளுடன் பறந்த இஸ்ரோ ராக்கெட் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) இருந்து அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் ப்ளூபேர்ட்-6 எனும் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோள், இஸ்ரோவின் எல்விஎம்-3 எம்6 ராக்கெட் மூலம் இன்று(டிச.24) காலை 8.54 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது அதனைத்தொடர்ந்து, தரையில் இருந்து புறப்பட்டு 15 நிமிஷம் 52 வது வினாடியில், 520 கி.மீ உயரத்தில், புவியின் தாழ் வட்ட சுற்றுப் பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது
வானிலை முன்னெச்சரிக்கை.குளிர் நீடிக்கும்.
தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விடக் குறைவான வெப்பநிலையே நீடிக்கும். வட தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் இரவு நேரக் குளிர் அதிகமாக இருக்கும். அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை 13°C முதல் 14°C வரை குறைய வாய்ப்புள்ளது. சென்னை நிலவரம்: இன்றும் நாளையும் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் நகரின் சில இடங்களில் இரவு நேர வெப்பநிலை 20°C-க்குக் கீழ் செல்ல அதிக வாய்ப்புள்ளது.
வங்கக்கடலில் உருவானது ‘டிட்வா’ புயல்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்தது. புயலாக உருவானதை தொடர்ந்து ஏமன் நாடு பரிந்துரைத்த ‘டிட்வா’ (DITWAH) என பெயர் சூட்டியது இந்திய வானிலை ஆய்வு மையம். வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் சென்னைக்கு தென் கிழக்கே 700 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் – இந்திய வானிலை […]
டெல்லி குண்டுவெடிப்பு.
சிக்கிய சிவப்பு கார்டெல்லி பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிவப்பு நிற ஈகோ ஸ்போர்ட் கார் ஹரியானாவில் சிக்கியது டெல்லி பதிவெண் கொண்ட காரை பறிமுதல் செய்து காவல்துறையினர், தடயவியல் துறையினர், தேசிய பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்
கோத்தகிரியில் கிணற்றுக்குள் பிணமாக கிடந்த புலி
நீலகிரி வனக்கோட்டத்துக்கு உட்பட்ட கீழ் கோத்தகிரி வனச்சரக பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் புதிதாக தோண்டப்பட்ட 20 அடி ஆழ கிணற்றுக்குள் புலியின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயார் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி
நாய் உரிமையாளர் மீது வழக்கு
மதுரையில் கடைக்கு சென்ற பள்ளி மாணவியை லேபர்டாக் இன நாய் கடித்தது. தட்டிகேட்ட மாணவியின் தாயாரை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரில் நாய் உரிமையாளர் விஜய் சாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது