கச்சா எண்ணெய் விலை அதிரடியாக சரிவு.
அமெரிக்கா – ஈரான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு. அமெரிக்கா – ஈரான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை (Crude Oil Prices) அதிரடியாகச் சரிந்துள்ளது. போர் பதற்றம் தணிந்ததையடுத்து ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை $95க்கும் கீழே வீழ்ந்தது. இதனால், ஹார்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் விநியோகம் மீண்டும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமான விபத்து – 29 பேர் பலி.
கிரீமியாவில் ரஷ்யாவின் ராணுவ விமானம் மலையில் விழுந்து நொறுங்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவின் ஏஎன் 26 ரக ராணுவ விமானம் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து விபத்தில் சிக்கியது. விமான விபத்தில் 23 பயணிகள் உட்பட 29 பேர் உயிரிழந்ததை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிபடுத்தியது; தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலைப்பாறையில் விமானம் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல்.
Shell India நிறுவன பங்க்-களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
Shell India நிறுவனம் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.25.01, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.41 உயர்த்தி அறிவிப்பு. இதன்மூலம் அந்நிறுவன பங்க்-களில் டீசல் லிட்டருக்கு ரூ.123.52 ஆகவும், பெட்ரோல் ரூ.119.85 ஆகவும் விற்பனை.
வணிக சிலிண்டர்களின் விநியோகத்தை 70%ஆக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவிப்பு.
மத்திய கிழக்குப் போரால் குறைக்கப்பட்ட, மாநிலங்களுக்கு கொடுக்கவேண்டிய வணிக சிலிண்டர்களின் அளவை 70%ஆக உயர்த்தி வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு. போரால் 30%ஆக குறைக்கப்பட்டு பின்னர் 50%ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 70% இயல்பு நிலைக்கு வணிக சிலிண்டர்களின் விநியோகத்தை உறுதி செய்வதாக அறிவிப்பு.
தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய் ஆவேசம்.
அரசியல் விமர்சகர், அப்துல் கலாமின் முன்னாள் உதவியாளர் என்று கூறப்படும் பொன்ராஜ் பேசிய பேச்சு ஒன்று சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. “இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார் என தவெக விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். […]
லாக் டவுன் வதந்தி. – மத்திய அரசு விளக்கம்
இந்தியாவில் பொதுமுடக்கம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அப்படி எந்த ஒரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ஈரான் போர் காரணமாக எரிபொருட்களுக்கான பற்றாக்குறை அதிகரித்து, கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டது போன்ற ஒரு பொதுமுடக்கம் மீண்டும் ஏற்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்படும் நிலையில், மத்திய அரசு அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ஐந்து ரூபாயும் டீசல் லிட்டருக்கு மூன்று ரூபாயும் உயர்த்தப்பட்டது. ஈரான் யுத்தம் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் ஒரே நாளில் இரு முறை சவரனுக்கு Rs.5360/- சரிவு
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.3,200 குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் மேலும் ரூ.3,200 சரிந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.670 குறைந்து ஒரு கிராம் ரூ.13,900க்கு விற்பனையாகிறது. காலையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்த நிலையில் மாலையில் விலை மாற்றமில்லை.
சாலையில் கிடந்த 5பவுன் நகையை போலிசில் ஒப்படைத்த தொழிலாளி
தாம்பரம் அருகே சாலையில் கிடந்த ஐந்து பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த கூலி தொழிலாளிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தாம்பரம்:- தாம்பரம் அடுத்த சேலையூர் ,ராஜாஜி நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முருகன் (54) நேற்று இரவு அகரம்தென் பிராதான சாலை அம்பேத்கார் நகரில் சாலையில் பை ஒன்று இருப்பதை பார்த்தார் அதனை எடுத்து கொண்டு வீட்டிற்க்கு சென்றவர் தனது மகன் சீனிவாசனிடம் கொடுத்துள்ளார். அந்த பையை திறந்து பார்த்த போது அதில் ஐந்து சவரன் தங்க நகை […]
வெளி நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு விசா நீட்டிப்பு.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்திருக்கும் நபர்களுக்கு 30 நாட்கள் வரை விசா நீட்டிப்பு. இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு, கூடுதல் நாட்கள் தங்கியிருப்பதற்கான அபராதமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.