என்ஜினீயரிங் படிப்பில் சுமார் 60 ஆயிரம் இடங்கள் காலி

சிறப்பு, பொது கலந்தாய்வு தமிழ்நாட்டில் 442 கல்லூரிகளில் உள்ள பல்வேறு என்ஜினீயரிங் படிப்புகளில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 780 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்த கலந்தாய்வு மூலம் 775 இடங்கள் நிரப்பப்பட்டு இருந்தன. அதனைத்தொடர்ந்து பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவு ஆகியவற்றுக்கான கலந்தாய்வு தொடங்கி, கடந்த 3-ந் தேதியுடன் நிறைவு […]

காலாண்டுத் தேர்வில் பொது வினாத்தாள் முறை: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, பொது வினாத்தாள் முறையில் காலாண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் நிலை குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது, மாவட்ட அளவில் தயாரிக்கப்படும் காலாண்டுத் தேர்வு வினாத் தாள்களில், பாட நூல்களில்உள்ள வினாக்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவது தெரியவந்தது. இதற்குத் தீர்வுகாணும் வகையில் காலாண்டு, அரையாண்டுத் […]

6 முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

6 முதல் 10ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைகிறது. ப்ளஸ் 1, ப்ளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி காலாண்டுதேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.

மணற்கேணி’ செயலி நாளை அறிமுகம்!

நாட்டிலேயே முதல்முறையாக காணொலி வடிவத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு பாடங்களை அளிக்கும் மணற்கேணி என்ற செயலியை நாளை அறிமுகப்படுத்துகிறது தமிழ்நாடு அரசு

நாளை மறுநாள் முதல் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் பயிலகம்’ தொடக்கம்

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு. முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை ஒட்டி தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு. அந்நாளில் காமராஜரின் உருவச்சிலைக்கு மரியாதை செய்யவும், மாணவ – மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்டவை வழங்கவும் இயக்க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்.

இரவு நேர பாடசாலையை தொடங்க நடிகர் விஜய் முடிவு

காமராஜர் பிறந்தநாளில் (ஜூலை 15 ) 234 தொகுதிகளிலும் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், இரவு நேர பாடசாலையை விஜய் மக்கள் இயக்கம் தொடங்குகிறது; விழியகம், குருதியகம், விருந்தகத்தை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இரவு நேர பாடசாலையை தொடங்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்

இன்று மாலையுடன் நிறைவு!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 13,000 பேர், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமார் 27,000 பேர் என மொத்தம் 40,000க்கும் மேற்பட்டோர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜூலை 16ல் தரவரிசைப் பட்டியல் வெளியாகும்.

சாய்ராம் கல்வி குழும நிறுவனர் லியோமுத்து நினைவு நாளில் ரூ 8 கோடிக்கு உதவி

ஸ்ரீ சாய்ராம் கல்விக்குழும நிறுவனர் மறைந்த லியோ முத்துவின் 8 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆதரவற்ற, வசதி குறைவான மாணவர்களுக்கு 8 கோடி ரூபாய்கான கல்வி உதவிகளை கலைச்செல்வி லியோ முத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சாய்ராம் கல்விக்குழும முதன்மை செயல் அலுவலர் சாய்பிரகாஷ் லியோ முத்து, சர்மிளா ராஜா ஊள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

வரும் புதன்கிழமை வரை விண்ணப்ப அவகாசம் இருப்பதால் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. இணையவழி விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் கடந்த திங்கள்கிழமையுடன் (ஜூலை 10) நிறைவடையவிருந்த நிலையில், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று வரும் 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. […]