இசை நிகழ்ச்சிக்கு கிடைத்த தொகையை ராணுவத்துக்கு வழங்கிய இளையராஜா

இசை அமைப்பாளர் இளையராஜா தனது இசை நிகழ்ச்சிகளுக்கு கிடைத்த தொகையை ராணுவ நீதிக்கு வழங்குவதாக கூறியுள்ளார் அவர் கூறியிருப்பதாவது”என் நாடு மீது பெருமிதம் கொண்ட ஒரு இந்தியனாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், என் இசை (Valiant) நிகழ்ச்சிகளில் கிடைத்த தொகையும், ஒரு மாத சம்பளமும் சேர்த்து, “தேசிய பாதுகாப்பு நிதிக்கு” (National Defence Fund) நன்கொடையாக அளிக்க முடிவு செய்துள்ளேன்.இந்த நன்கொடை என் “Valiant” இசைக்கு மட்டும் அல்ல – நம் நாட்டின் வீரர்களின் வலிமைக்கும், தீவிரவாதத்தை ஒழிக்க […]

பழைய படங்களில் செய்த தவறுகளை தவிக்கிறேன் அஜித் குமார் பேட்டி

நடிகர் அஜித்குமார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் பல்வேறு சுவாரஸ்யமான கருத்துக்களை கூறியுள்ளார் ஆரம்ப கட்டத்தில் நடித்த படங்களில் பெண்களை கிண்டல் செய்தும் அவர்களை குற்றச்செயலில் ஈடுபடுத்தும் காட்சிகளிலும் நடித்த தன் காரணமாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து தன் தவறை சரி செய்து கொண்டதாக கூறினார். இதுபோன்ற பெண்களுக்கு எதிரான காட்சிகளை தன் படங்களில் தவிர்த்து வருவதாகவும் அவர் கூறினார்

விஜய் மகனை கேள்விகளால் துளைத்தெடுக்கும் குட்டி நடிகன்

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமாகி திரைப்படங்களில் நடித்து வரும் சிறுவன் கமலேஷ் பல படங்களில் நடித்திருக்கிறான் தற்போது நடிகர் விஜய் மகன் ஜேசன் விஜய் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறான் அந்த படத்தில் நடிக்கும் போது விஜய் மகனே கேள்விக்கணைகளால் துளைத்து எடுப்பதாக சிறுவன் கமலேஷ் தெரிவித்துள்ளான் ஆனால் விஜய் மகன் அமைதியாக பதிலளிப்பார் என்று அவன் கூறியுள்ளான்

42 வயதில் கவர்ச்சி ஆட்டத்தில் கலக்கும் நடிகை ஸ்ரேயா

பிரபல நடிகை ஸ்ரேயா தமிழ் படங்களில் நடித்து புகழ்பெற்ற திடீரென திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த பிறகும் மீண்டும் தற்போது நடிக்க வந்துள்ளார் ..சூர்யா நடித்த ரெட்ரோ படத்தில் அவர் கவர்ச்சி ஆட்டம் மட்டும் போட்டு இருக்கிறார். இதை பார்த்து அவருக்கு இந்தி ,தெலுங்கு படங்களிலும் இதேபோன்று கவர்ச்சி ஆட்டம் போட வாய்ப்பு கிடைத்துள்ளது . 42 வயதிலும் அவர் மீண்டும் கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கி இருப்பது மற்ற நடிகைகளை சிந்திக்க வைத்துள்ளது

விராட் கோலி வாழ்க்கை வரலாறு படத்தில் சிம்பு நடிக்கிறாரா?

பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு படமாக போவதாக பேச்சு அடிபடுகிறது இந்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாகவும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது சிம்புவின் ஹேர் ஸ்டைல் முகபாவம் எல்லாம் விராட் கோலி போல இருப்பதால் இந்த செய்தி வெளியாகி உள்ளது .ஏற்கனவே சிம்பு பாடிய ஒரு படத்தின் பாடலை விராட் கோலி தனக்கு பிடித்ததாக கூறி தனது எக்ஸ தளத்தில் வெளியிட்டு இருந்தார். இதனால் […]

நடிப்புக்கு திடீர் முழுக்கு போடுவேன் – அஜித்

நடிகர் அஜித்குமார் இந்தியா டுடே டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:ஒவ்வொரு நாளும் ஆசீர்வதிக்கப்பட்ட நாள் தான் .அதை நாம் வாழ்ந்து பார்க்க . வேண்டும்.நான் நடிப்புக்கு முழுக்கு போடுவது திடீரென நடக்கலாம்.ஆனால் எப்போது என்று கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்

ரஜினி படத்தில்நடிகர் பாலகிருஷ்ணா.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் நடித்து. வருகிறார் இந்த படத்தில் ஏற்கனவே நடித்த மோகன்லால் தவிர எஸ்.ஜே சூர்யாவும் சேர்ந்து நடிக்கிறார்கள்.இது தமிழ், , தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதன் காரணமாக மேலும் ஒரு சூப்பர் ஸ்டாரை இந்த படத்தில் இணைக்கிறார்கள். அவர்தான் ஆந்திர நடிகர் பாலகிருஷ்ணா. சமீபத்தில் ஜனாதிபதி விருது பெற்றவர் .இந்த படத்தில் நடிக்கும் அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளனர்

பஹல்காம் தாக்குதலுக்கு அஜித் கண்டனம்

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன்இந்த விவகாரத்தில், அரசு தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறது.நாம் அனைவரும் வேற்றுமைகளை மறந்து, அமைதியான சமூகமாக வாழ வேண்டும், என்று நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.

சிரஞ்சீவி ஜோடியாக நடிக் க 18 கோடி கேட்ட நயன்தாரா

ஆந்திரா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி புதிய படத்தில் நடிக்கிறார் இதில் அவருடன் ஜோடியாக நடிக்க நயன்தாராவை கேட்டனர் அப்போது அவர் இந்த படத்தில் நடிக்க ரூபாய் 18 கோடி கேட்டதாக கூறப்படுகிறது இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது ஏற்கனவே அவர் 10 கோடி மட்டுமே வாங்கி ஒரு நிலையில் திடீரென சம்பளத்தை உயர்த்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மனோஜ்க்கு கவிஞர் வைரமுத்துவின் இரங்கல்

கவிஞர் வைரமுத்துவின் இரங்கல் !மகனே மனோஜ்!மறைந்து விட்டாயா?பாரதிராஜாவின்பாதி உயிரே! பாதிப் பருவத்தில்பறந்து விட்டாயா?‘சிங்கம் பெத்த பிள்ளையின்னுதெரியவப்போம் வாடா வாடா’என்று உனக்குஅறிமுகப் பாடல் எழுதினேனே சிங்கம் இருக்கப்பிள்ளைநீ போய்விட்டாயா?உன் தந்தையைஎப்படித் தேற்றுவேன்? “எனக்குக் கடன் செய்யக்கடமைப்பட்டவனே!உனக்கு நான் கடன்செய்வதுகாலத்தின் கொடுமைடா” என்றுதகப்பனைத் தவிக்கவிட்டுத்தங்கமே இறந்துவிட்டாயா? உன் கலைக் கனவுகள்கலைந்து விட்டனவா?முதுமை – மரணம் இரண்டும்காலத்தின் கட்டாயம்தான்.ஆனால், முதுமைவயதுபார்த்து வருகிறது;மரணம் வயதுபார்த்துவருவதில்லை சாவுக்குக் கண்ணில்லைஎங்கள் உறக்கத்தைக்கெடுத்துவிட்டவனே!உன் உயிரேனும்அமைதியில் உறங்கட்டும் !