ஹிந்தியில் பேச மறுத்த நடிகை கஜோல்
மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கஜோல் இந்தியில் பேச மறுத்த விவகாரம் விவாதத்தை கிளப்பியுள்ளது. நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட கஜோல் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். மராத்தியிலும் பிறகு ஆங்கிலத்திலும் பேசிய அவரிடம் நிருபர் ஒருவர் இந்தியில் பேசுமாறு கூறினார். இதனால் கோபமடைந்த கஜோல், “நான் இந்தியில் பேச வேண்டுமா? யாருக்கு புரியவேண்டுமோ அவர்களுக்கு புரியும்” என்று கடுமையான தொனியில் கூறினார்.
சினிமா புகழும் சுயலாபமும்அஜித்குமார் பரபரப்பு அறிக்கை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிக ரான அஜித்குமார். திரையுலகில் தனது 33 ஆண்டுகளை நிறைவு செய்தார். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்களை நிறைவு செய்கிறேன். எண்ணில் அடங்காத அளவுக்கு வெற்றி யும், தோல்வியும் சினிமாவில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் வெற்றி மீது நான் சந்தேகம் கொள்ளும்போதும் உங்கள் அன்புதான் என்னை மீண்டு வர செய்துள்ளது.ரசிகர்க ளின் அன்பை என் சுயலாபத்துக்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த […]
சொந்த படத்தில் மட்டுமே நடிக்க கமல் முடிவு
நடிகர் கமல்ஹாசன் நடித்த தக் லைப் திரைப்படம் தோல்வி அடைந்தது இருந்தாலும் அவர் நடித்த விக்ரம் தயாரித்த அமரன் போன்ற படங்கள் வெற்றி பெற்றன இதன் காரணமாக இனிமேல் தனது சொந்த கம்பெனி தயாரிக்கும் படத்தில் மட்டுமே நடிப்பது என்று கமல் முடிவு செய்துள்ளார்
கூலி திரைப்படம் டிக்கெட் முன்பதிவில் சாதனை
நடிகர் ரஜினிகாந்த் பூஜா ஹெக்டே நடித்த கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது இதன் பாடல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் இரண்டாம் தேதி நடைபெறுகிறது இந்த நிலையில் வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் கூலி திரைப்படத்திற்கான முன்பதிவு நடந்து வருகிறது இப்போதே முன்பதிவு வசூல் ரூபாய் 5 கோடியை தாண்டி விட்டதாக தெரிவித்துள்ளனர் இது புதிய சாதனையாகும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் அனிருத் இசை அமைத்துள்ளார்
ரஜினி படத்தில் கமல் நடிப்பாரா?
நடிகர் ரஜினிகாந்த் நடித்த வரும் கூலி திரைப்படத்தில் கமலஹாசன் குரலை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன ஆனால் இந்த தகவலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக மறுத்தார்.இது ரஜினிகாந்த் படம் நினைவில் அதில் கமல் நடிக்க இயலாது அதேபோல கமலுக்கான படத்தில் ரஜினி நடிக்க இயலாது என்று அவர் கூறினார்
மீண்டும் ரிலீசாகும் விஜயகாந்த் படம்.
விஜயகாந்த் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம். கேப்டன் பிரபாகரன் இந்த படம் 1991 ஆம் ஆண்டு வெளியானது. இது விஜயகாந்தின் நூறாவது படம் ஆகும் .தற்போது இந்த படம் மீண்டும் வெளியாகிறது ஆகஸ்ட் மாதம் விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர் படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி அமைத்துள்ளனர்
தொழில் அதிபர் ஆன நடிகை ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். அவர் நடித்து அடுத்து ‘த கேர்ள் ஃபிரண்ட்’ உள்பட சில படங்கள் வெளியாக இருக்கின்றன. இதற்கிடையே ‘டியர் டைரி’ என்ற வாசனை திரவிய பிராண்ட் ஒன்றை அவர் ஆரம்பித்து அறிமுகப்படுத்தியுள்ளார். அழகு மற்றும் வாசனை திரவிய உற்பத்தியில் முன்னணியில் உள்ள பிசிஏ குழுமத்துடன் இணைந்து அவர் இதைத் தயாரிக்கிறார். ‘டியர் டைரி’யின் ஆரம்ப தொகுப்பில், ‘நேஷனல் க்ரஷ்’, ‘இன்ரிபிளேசபிள்’, ‘கான்ட்ரவர்சியல்’ ஆகிய தனித்துவமான 3 […]
ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கமல்
மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் திமுக ஆதரவுடன் பாராளுமன்ற மேல் சபை எம்பி ஆகி உள்ளார் .விரைவில் பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் தொடங்க உள்ளது. இதற்காக டெல்லி செல்லும் அவர் முதலில் எம்பியாக பதவி ஏற்கிறார். தொடர்ந்து பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார் . இந்த நிலையில் அவர் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்
நடிகை சரோஜா தேவி மரணம்
இந்தியத் திரையுலகின் பொற்காலத்தைத் தனது வசீகர நடிப்பால் அலங்கரித்த, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, இன்று (ஜூலை 14, 2025) தனது 87-வது வயதில் காலமானார். பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடு காரணமாக காலை 9 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய திரையுலகினர் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை அவரது மறைவு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் :விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் உள்பட 29 பேர் மீது வழக்கு
சூதாட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதேநேரத்தில், சில செயலிகள் திறமையை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுக்கள் என்ற பெயரில் சூதாட்டங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு கண்டறியப்பட்ட ஜங்லீ ரம்மி, ஜீட்வின், பாரிமேட்ச், லோட்டஸ் 365 போன்ற செயலிகளுக்கு ஆதரவாக விளம்பரங்களில் நடித்ததாக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய தேவரகொண்டா, ராணா டகுபதி, மஞ்சு லட்சுமி, பிரணீதா, நிதி அகர்வால், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக பிரமுகர்கள் அனன்யா நாகெல்லா, ஸ்ரீமுகி, வர்ஷீனி சவுந்தரராஜன், வசந்தி கிருஷ்ணன் உள்ளிட்ட […]