நடிகர் விஜய் காருக்கு ரூபாய் 500 அபராதம் விதிப்பு

நேற்று நீலாங்கரையில் இருந்து பனையூருக்கு செல்லும் போது போக்குவரத்து சிக்னலை மீறியதற்காக நடிகர் விஜய் காருக்கு ரூபாய் 500 அபராதம் விதிப்பு

இயக்குநர் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து மீது லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் உறவினர்கள் புகார்

தங்களின் சொத்துக்களை தங்களுக்கே தெரியாமல் விக்னேஷ் சிவனின் தந்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு. விக்னேஷ் சிவனின் தாய் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா, விக்னேஷ் சிவன், நயன்தாரா மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க புகார் மனு.

ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தின் முன்னோட்டம், ஹாலிவுட் படமான ‘மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்’ எனும் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் திரையிடப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

‘பதான்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மெகா சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் தயாராகி, விரைவில் வெள்ளி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘ஜவான்’. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம், ‘மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்’ எனும் ஹாலிவுட் படம் வெளியாகும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இது தொடர்பாக ட்விட்டரில் வெளியான பதிவில்…# ஷாருக்கானின் அடுத்த வெளியீட்டிற்கான கவுண்ட் டவுனைத் தொடங்குங்கள். # ஜவான் படத்தின் முன்னோட்டத்தை காண தயாராகுங்கள். # மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் […]

நேற்று மாமன்னன் திரைப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார்

“மாமன்னன் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்” என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘ஹரா’ திரைப்படத்தில் வெள்ளிவிழா நாயகன் மோகனுடன் மோதும் சுரேஷ் மேனன், அமைச்சராக அசத்தும் வனிதா விஜயகுமார்

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிப்பில், ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தில் அவருடன் மோதும் எதிர்மறை பாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். மேலும், அதிரடி அரசியல்வாதியாகவும் அதகளம் செய்யும் அமைச்சராகவும் இதுவரை ஏற்றிராத வித்தியாச வேடத்தில் வனிதா விஜயகுமார் நடிக்கிறார். ‘ஹரா’ திரைப்படத்தில் சுரேஷ் மேனன் மற்றும் […]

நடத்துனராக இருந்தபோதே நடித்த ரஜினி.. ரகசியம் பகிர்ந்த மாரிமுத்து

ரஜினிகாந்த் நடத்துனராக இருந்தபோதே நடித்திருக்கிறார் என்று நடிகர் மாரிமுத்து தெரிவித்திருக்கிறார்.சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனவை. அவரது ஸ்டைல், நடை, உடை என அனைத்துமே இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. இதன் காரணமாகத்தான் அவர் இன்றுவரை சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர்க்களமாக அமர்ந்திருக்கிரார். மேலும் அவரது வழியை ஃபாலோ செய்துதான் பல நடிகர்கள் இருக்கிறார்கள் சறுக்கிய ரஜினி: ரஜினிகாந்த்துக்கு […]

நடிகர் விஜய் ஓய்வு?

தளபதி 68 படத்திற்குப் பிறகு 3 ஆண்டுங்கள் நடிப்பதிலிருந்து விஜய் ஓய்வு எடுக்கப் போவதாக தகவல்; 2026 தேர்தலுக்கான அயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபடப் போவதாகவும் தகவல்

ரூ.10 கோடி வசூலைத் தாண்டிய ‘மாமன்னன்’

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள ‘மாமன்னன்’ ஜூன் 29ம் தேதி வெளியானது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வரும் இந்த படம் முதல் நாளில் ரூ.6 கோடியையும், 2வது நாளான நேற்று (ஜூன் 30) 5 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களில் அதிக திரைகளில் வெளியான படம் ‘மாமன்னன்’ என்பது குறிப்பிடத்தக்கது.