இன்னும் நான் காதலிக்கிறேன்: நடிகை நளினி ஓப்பன் டாக்

தமிழ் திரையுலகில் 1980-90-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த நளினி நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் நளினி, “ராமராஜன் மிகவும் தங்கமானவர். விவாகரத்து ஆனாலும் ராமராஜனை இன்னும் நான் காதலிக்கத்தான் செய்கிறேன். இது அவருக்கும் தெரியும்” என்றார்.

ரூ.170 கோடி வருமானமா? : பிரபல நடிகர் பதில்

தமிழில் ‘அஞ்சான்’ படத்தில் வில்லான நடித்து பிரபலமானவர் மனோஜ் பாஜ்பாய். இவர் மும்பையில் சமீபத்தில் நடந்த நேர்காணலில் பங்கேற்றபோது, ரூ,170 கோடி வருமானம் வைத்துள்ளதாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, “நான் செய்யும் வேலையை வைத்து இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியாது. இன்னும் எனது வங்கி கணக்கில் பணம் சேர்க்க கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறேன்” என்றார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று…..

இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். பராசக்தியில் நடித்துக் கொண்டிருந்தபோதே, சிவாஜி கணேசனுக்குத் திருமணம் நடந்து விட்டது. தனது உறவுக்கார பெண்ணான கமலா என்பவரை 1952 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி மணந்தார். பெரியவர்களால் முடிவு செய்யப்பட்ட இத்திருமணம், சுவாமிமலையில் […]

‘அநீதி’ திரைப்படத்திற்கான கதை இங்கேதான் ஆரம்பம்!

அர்ஜுன் தாஸ் – துஷாரா விஜயன் கூட்டணியில் ஜூலை 21ம் தேதி வெளியாகவுள்ளது ‘அநீதி’ திரைப்படம். இந்நிலையில், “இத்திரைப்படத்தின் கதை ஒரு பிரபலமான சாக்லெட் விளம்பரத்திலிருந்து உருவானது. சாக்லெட் சாப்பிடும் இளைஞன் எதுவும் செய்யாமலிருந்து மூதாட்டியை காப்பாற்றுவார். இது எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. இதை வைத்தே இந்த திரைப்படத்தை எடுத்தேன்” என இயக்குநர் வசந்தபாலன் கூறியுள்ளார்.

நடிகர் யோகிபாபு நடிக்கும் அடுத்த படத்தின் First Look வெளியானது….

23 ஆம் புலிகேசி போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் முன்னணி நடிகர் யோகிபாபு நடிக்கும் அடுத்த படத்திற்கு #Boat என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் First Look இன்று வெளியானது..

குரோம்பேட்டை தியேட்டரில் மாவீரன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் இன்று வெளியான மாவீரன் முதல் காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் அவர் மனைவி ஆர்த்தி, படத்தின் காதாநாயகி ஆதிதீ சங்கர், நடிகர் விஜய் மனைவி சங்கீதா விஜய் உள்ளிட்டவர்கள் படம் பார்த்தனர். அதனை தொடர்து சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசினார்….