சிம்பு ரசிகருக்கு அப்டேட் தந்த இயக்குநர்

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தயாராகும் ‘STR 48’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரசிகர் ஒருவர் ‘STR 48’ படத்தின் அப்டேட் எப்போ? என சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, “விரைவில் வரும்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

‘ஜெயிலர்’ படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

‘ஜெயிலர்’ படத்தை விமர்சித்துள்ள ப்ளூ சட்டை மாறன், “டார்க் காமெடி என்றால் திரையில் தோன்றுபவர்கள் சீரியஸான நேரத்தில் காமெடி செய்வார்கள். நமக்கு சிரிப்பு வரும். ஆனால் ஜெயிலரை பார்க்கும்போது திரையில் இருப்பவர்கள் செய்யும் காமெடியை பார்த்து நாம் சீரியஸாகி விடுகிறோம். படத்துக்கு வில்லன் கேரக்டர்தான் முக்கியம். ஆனால் வில்லன் படுத்தே விட்டானாய்யா ரேஞ்சுக்கு இருக்கிறார்” என்றார்.

பிரபல நடிகையுடன் திருமணமா?; விஷால் விளக்கம்

சமீபத்தில் நடிகர் விஷாலும் நடிகை லஷ்மி மேனனும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், “இந்த தகவல் உண்மையல்ல. ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த வதந்திக்கு நான் விளக்கம் அளிக்கிறேன். நேரம் வரும்போது திருமணம் குறித்து நானே அறிவிக்கிறேன்” என விஷால் விளக்கமளித்துள்ளார்.

‘ஜெயிலர்’; முதல் நாளிலேயே செம வசூல்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ படம் நேற்று(ஆக.10) வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் ‘ஜெயிலர்’ இந்தியாவில் ரூ.49 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டில் ரூ.23 கோடியும், கர்நாடகாவில் ரூ.11 கோடியும், கேரளாவில் 5 கோடியும், ஆந்திரா – தெலங்கானா ரூ.10 கோடியும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது எப்படி இருக்கு மனைவி மாமியார் முன்னிலையில் திரிஷாவுடன் படம் பார்த்த தனுஷ்

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தை பார்க்க சென்றார்.என்னதான் தன் மாமனார் குடும்பத்தில் பிரச்சனை இருந்தாலும் அதை எல்லாம் கொஞ்சம் கூட நினைத்து பார்க்காமல் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ரஜினியைத் தவிர்த்தாலும், சூப்பர் ஸ்டாரின் முதல் நிகழ்ச்சிக்கு முதல் நாள் ரசிகராக கலந்து கொண்டார் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷ் மற்றும் நடிகை த்ரிஷா ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் […]

மீண்டும் சொதப்பினாரா நெல்சன்?

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. நெல்சன் திலிப் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. இதனால் தனது அடுத்த படத்தின் கதையை தேர்வு செய்ய ரஜினி நீண்ட நாட்களை எடுத்துக் கொண்டார். கடைசியாக நெல்சன் தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே […]

கமலுக்கு ரஜினி அறிவுரை

கமர்சியல் படம் என்ற பெயரில் ஆபாசம் கலக்காமல் படம் எடுக்க வேண்டும். விக்ரம் படத்தை நகலாக எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டாலும், குடும்பத்துடன் ரசிக்கும்படியான படத்தை கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.. விக்ரம் படத்தில் முகம் சுளிக்கும் வகையில் ஆபாச காட்சிகளை திணித்ததற்கு ரஜினி அட்வைஸ்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் மிருணாள் தாக்கூர்

‘மாவீரன்’ படத்திற்கு பின் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதற்கான பணிகளை படக்குழு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் கமிட் ஆகியுள்ளார். தற்போது ஹிந்தி படங்களில் பிஸியாக இருக்கும் அவர் ஓரிரு வாரங்களில் இப்படத்தில் கையெழுத்திட உள்ளார். ‘சீதா ராமம்’ மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் மிருணாள் தாக்கூர்.

ஓடிடிக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்ட இந்தியன் 2

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தில் லோலா விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். இது கமலின் […]