சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை

வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை – ஏ.ஆர்.ரகுமான் .இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் விஸ்வநாதன் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, உறுப்பினர்கள் லதா, சச்சு, சத்யபிரியா, குஷ்பூ, கோவை சரளா, லலிதகுமாரி, தேவயானி, சோனியா வெங்கட் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். சமீபத்தில் மறைந்த 64 கலைஞர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்றைய பொதுக்குழு கூட்டத்தின் தலைமையை நாசர் ஏற்றுக் கொள்ள அதை துணைத்தலைவர் பூச்சி S.முருகன் முன்மொழிய, லதா அதை வழிமொழிந்தார். பொதுச்செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்தினார். கோவை சரளா 2022-2023ம் […]

பிரபல குணச்சித்திர நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் மரணம்

ஜெயிலர், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர், மாரிமுத்து. சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் மாரிமுத்துவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான வருசநாடு பகுதிக்கு உடல் கொண்டு செல்லப்பட உள்ளது.

ஜவான் ஷாரூக்கான் நடித்த ஜவான் திரைப்படம் அவரது திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிப்படம் என ரசிகர்கள் கொண்டாட்டம்

ஒரே நாளில் 50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல், கடார்-2 வசூல் சாதனையைமுறியடிக்கவும் வாய்ப்பு

கங்கனா ரனாவத்திற்கு ஜோதிகா பாராட்டு

” இந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத், சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பதை கண்டு மிகவும் பெருமையடைகிறேன்; சந்திரமுகி கதாபாத்திரத்தில் நீங்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்கிறீர்கள். நான் உங்கள் ரசிகை. இந்த திரைப்படத்தில் உங்களின் நடிப்பை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். லாரன்ஸ் மாஸ்டருக்கும், இயக்குநர் பி. வாசுவுக்கும் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள்.”

“ஜவான் திரைப்படம் கொண்டாட்டமாக இருக்கப் போகிறது!;

இந்த மெகா திரைப்படத்தை உருவாக்கிய என் அன்பு சகோதரர் அட்லீக்காக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்; என்ன எனர்ஜி ஷாருக்கான் சார்!; இத்திரைப்படம் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்!”

31 ஆண்டுகளுக்கு பின் இணையும் பாரதிராஜா – இளையராஜா கூட்டணி!

மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘மார்கழி திங்கள்’. இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.1999-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘தாஜ்மகால்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. இதைத்தொடர்ந்து, ‘சமுத்திரம்’,’வருஷமெல்லாம் வசந்தம்’, ‘அல்லி அர்ஜுனா’, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.    இவர்  இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘மார்கழி திங்கள்’. புதுமுகங்களை கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் […]

“ரஜினிக்கு லாபப் பகிர்வு ரூ.100 கோடி”

ஜெயிலர் படம் மூலம் 22 நாட்களில் 625 கோடி ரூபாய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்ததால் லாப பகிர்வு தொகையாக ரூ. 100 கோடிக்கான காசோலையை ரஜினிக்கு கலாநிதிமாறன் வழங்கியதாக தகவல். ஏற்கனவே இந்த திரைப்படத்திற்காக ரஜினி ஊதியம் ரூ. 110 கோடி பெற்றார். தற்போது ரூ. 100 கோடி கிடைத்ததால் ஜெயிலர் படத்தில் நடித்ததற்காக மொத்தம் 210 கோடி ரூபாய் ரஜினிக்கு கிடைத்ததாக தகவல்.