மீண்டும் நடிக்கிறார் விஜய்

ஜன நாயகன்’ திரைப்படம் லீக் ஆனதால் பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது எனவேதயாரிப்பு நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடு செய்வதற்காக புதிய படத்தில் நடித்து கொடுக்க விஜய் அதிரடி முடிவு என தகவல்!

இளையராஜாவுக்கு இடைக்கால தடை

இளையராஜா மற்றும் சரிகம நிறுவனத்திற்கு இடையே டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற காப்புரிமை வழக்கு. சரிகம நிறுவனம் வசம் உள்ள 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த கூடாது என ஆணை. பாடல்களைப் பயன்படுத்தவோ, உரிமை கோரவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ கூடாது என்றும் ஆணை.

2-ஆவது சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா!

இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் அவரது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் தனது இரண்டாவது சிம்பொனியை கிட்டதட்ட எழுதி முடித்துவிட்டதாகக் கூறியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிப்.3, 2026 உடன் புதிய ஸ்டூடியோவிற்கு வந்து, ஐந்தாண்டுகள் நிறைவடையவிருக்கிறது. என்னுடைய இரண்டாவது சிம்பொனியையும் கிட்டதட்ட எழுதி முடித்துவிட்டேன் எனக் கூறியுள்ளார்.

பிற மொழியை வெறுக்க வேண்டியதில்லை: கமல்ஹாசன்

அன்பு ஒரு போதும் விஷமமாக மாறக் கூடாது; மொழியும் அப்படித்தான். என்னிடம் யாரும் மொழியை திணிக்க முடியாது. நான் 27 வயது வரை இந்தி மொழியை கற்றுக் கொள்ளவே இல்லை. ஒரு வார்த்தை கூட தெரியாது, பிறகு பேசும் அளவிற்கு இந்தி கற்றுக் கொண்டேன், ஆனாலும் இந்தி எழுதத் தெரியாது. நான் மூன்று மொழிகளில் நன்கு பரிட்சயம் பெற்றவன். ஒன்று தமிழ், இரண்டாவது ஆங்கிலம், மூன்றாவது சினிமா; சினிமாவால் எல்லா மொழியையும் பேச முடியும். மொழி என் […]

சுயசரிதை எழுதுகிறார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் – 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது சுயசரிதையை எழுத தொடங்கி உள்ளதாக அவரது மகள் ஐஸ்வர்யா தெரிவித்தார். இதுவரை வெளிவராத தகவல்கள் அந்த புத்தகத்தில இடம் பெறும் என்றும் அவர் கூறினார்.

மீண்டும் சிக்கலில் ’ஜனநாயகன்’ – தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்டு

‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. ஐகோர்ட்டு நீதிபதி பி.டி.ஆஷா, “இவ்வாறு மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரைத்தது செல்லாது. ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்” என்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை பெற்றது. பின்னர், இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் […]

“மங்காத்தா” அலையால்… – மோகன் ஜி வேதனை

திரௌபதி 2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை. மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை. மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை. இந்த சூழலை பயன்படுத்தி, பலர் படம் பார்க்காமல் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். திரைப்படத் துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 வருடங்களை கடந்து வந்துள்ளேன். மக்களின் தீர்ப்பே மகேசன் […]

ஜனநாயகன் திரைப்படம் தீர்ப்பு ஒத்திவைப்பு.

’ஜனநாயகன்’ பட சென்சார் சான்றிதழ் தொடர்பான மேல் முறையீடு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

கரூர் சம்பவம் – விஜய்க்கு சிபிஐ சம்மன்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் கூட்டத்தில் நெரிசலின் சிக்கி 41 பேர் பலியானார்கள் இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.ஏற்கனவே டெல்லியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் விசாரணை நடந்தது. தற்போது இந்த வழக்கில் நடிகர் விஜய் விசாரிக்கப்படுகிறார். இதற்காக அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது