மரகன்று

குரோம்பேட்டை புருஷோத்தமன் நகர் 2ஆவது குறுக்கு தெருவில் தாம்பரம் மாநகராட்சி 36ஆவது வார்டு உறுப்பினர் சரஸ்வதி சந்திரசேகர், சந்திரன் மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து மரகன்றுகளை நட்டனர். மாமன்ற உறுப்பினர் கூறுகையில் யார் வீட்டிலும் மரக் கழிவுகள் சாலையில் போடாமல் வீட்டிலேயே இருந்தால் உறுப்பினரை தொடர்பு கொண்டு அதை அகற்ற எற்பாடு செய்யப்படும். சாலையில் வீசப்படும் மரக்கழிவுகளுக்கு இனி மாநகராட்சி அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார்.

குரோம்பேட்டை நேரு நகரில் உள்ள ஸ்ரீ அய்யாசாமி அய்யர் பள்ளி

குரோம்பேட்டை நேரு நகரில் உள்ள ஸ்ரீ அய்யாசாமி அய்யர் பள்ளியில் சர்வதேச ரோட்டரி சங்கம் டோக்கியோ சுயோசின் ரோட்டரி சங்கம் இணைந்து தொடக்க பள்ளிக்கு (1 முதல் 5ம் வகுப்பு வரை) 5 ஸ்மார்ட் போர்டு நன்கொடையாக வழங்கப்பட்டது.பள்ளி செயலர் ஆர். மனோகரன், பள்ளி உறுப்பினர் சி.ஆர்.நரசிம்மன், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெ.இராஜஸ்ரீ, துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ரோசாலி, ஆசிரியர்கள் ஆகியோர் முக்கிய பிரமுகர்கள் மகாவீர் போத்ரா, பாலசந்திரன், மணிவண்ணன் மற்றும் வந்திருந்த அனைவரையும் […]

அஸ்தினாபுரம் புற்று ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயம்

அஸ்தினாபுரம் வினோபாஜி நகரில் அமைந்திருக்கும் புற்று ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு அம்பாள் வராகி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்.

குரோம்பேட்டை நகைக்கடை திடீர் மூடல் 150 பேர் பணம் அம்போ

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பிரணவ் ஜுவல்லரி கடை மூட்டப்பட்டதால் நகை சீட்டு, பழைய நடைகளை கொடுத்தவர் கடை முன்பாக திறண்டதால் பரபரப்பு. போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் அடுத்து 150 பேர் புகார் சுமார் 4 கோடிக்கு மேல் நகையாக தருவதாக கூறிய நிலையில் கடை மூடப்பட்டு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

குரோம்பேட்டையில் நாற்றமடிக்கும் நல்லப்பா தெரு

குரோம்பேட்டை நல்லப்பா தெருவில் உள்ள மழை நீர் கால்வாய் மலஜலம் செல்லும் கால்வாயாக மாறியதால் அந்த பகுதியே துர்நாற்றம் அடிக்கிறது. நோய்கள் பரவுவதற்கு ஏதுவாக அமைந்து உள்ளது. தாம்பரம் மாநகராட்சி 35 வது வார்டில் உள்ளது நல்லப்பா தெரு குரோம்பேட்டையின் முக்கிய பகுதியான இங்கு ஏராளமான வீடுகளும் பூங்காக்கள் மற்றும் கடைகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள ராஜேந்திர பிரசாத் சாலையில் இந்தியன் வங்கி சாலையில் பாதாள சாக்கடை மூடி உள்ளது. கனரக வாகனங்கள் செல்வதால் அந்த […]

குரோம்பேட்டை திரையரங்கில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் லியோ திரைப்படத்தில் டிரைலர் வெளியிடப்பட்டது. அதனை காண ஏராளமான விஜய் ரசிகர்கள் வருகை தந்தனர். டிரைலரை வெளியிடுவதற்கு முன்பு திரைப்படத்தின் பாடல்கள் ஒளிபரப்பட்டது. அதனை கேட்ட ரசிகர்கள் நடனமாடி, உற்சாகமடைந்தனர். முன்னதாக திரையரங்கு வாயிலில் மேளம் அடித்து, பட்டாசு வெடித்து, கொண்டாடினர். வைக்கப்பட்ட பேனரில் 2026 ல் தமிழகத்தின் ஒரே நம்பிக்கை தளபதி அவர்களின் லியோ திரைப்படம் இந்திய அளவில் வரலாறு சாதனை படைபடைக்க வாழ்த்துகிறோம் என 40 அடி உயர் பேனர் […]

குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை சார்பில் நடந்த நடைபயிற்சி

குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை சார்பில் நடந்த நடைபயிற்சியை நடிகை யாஷிகா ஆனந்த், இ.கருணாநிதி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர். இதில் மத்திய அஸ்தினாபுரம் முன்னாள் அரிமா சங்கதலைவர் தலைவர் எம்.ஜெயபால், காஞ்சி கணேசன் உட்பட 2000 பேர் கலந்துகொண்டனர்.

நடேசன் நகர் ஆக்கிரமிப்பு அகற்றம்

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம் குரோம்பேட்டைநடேசன் நகர் பகுதியில் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 உட்பட்ட 43-வது வார்டில் மக்கள் குறை தீர்ப்பு

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 உட்பட்ட 43வது வார்டில் உள்ள பாலாஜி அவென்யூ, சாந்தி அவென்யூ, பாலு அவென்யூ, கனகராஜ் அவென்யூ மற்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் குறைகளை, தெரிந்துகொள்ள மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் MC தலைமையில், சுகாதாரப்பிரிவு அதிகாரி திரு.நாகராஜ்(SO), கண்காணிப்பாளர் திரு.கார்மேகம்(SS), வருவாய்ப்பிரிவு ஆய்வாளர் திரு.பிரபாகரன்(RI), திரு.ரவிச்சந்திரன்(BC) மற்றும் பொறியாளர் பிரிவு திருமதி.ஜீவித்ரா(TA) மற்றும் அங்குள்ள பொதுமக்கள்கள் கலந்து கொண்டு மாநகராட்சியின் மூலம் எடுக்கப்படவேண்டிய வளர்ச்சி பணிகள் மற்றும் குறைகளும் அதற்குண்டான பொருட்கள் […]

தாம்பரம் வீட்டில் பிரபல ரவுடி தலை சிதைக்கபட்ட நிலையில் வெட்டி கொலை

பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி மோகன் ராஜ் இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது, இந்நிலையில் மோகன்ராஜ் மணிமங்கலம் அடுத்த ஆதனூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்து வந்துள்ளார், இன்று காலை மோகன்ராஜை சில மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துவிட்டதாக அவரது தங்கையின் செல்போனுக்கு தொடப்பு கொண்ட நபர் ஒருவர் கூறியதை அடுத்து பதறி போனவர் சம்பவ இடத்திற்க்கு சென்று பார்தத போது தலை […]