முடிச்சூர் லட்சுமி நகரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறிய குடும்பத்தினர்.
தாம்பரம் மண்டலம் 2க்கு உட்பட்ட பல்லாவரம் தெற்கு பகுதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழையால் பாதிக்க பட்ட மக்களை இ.எஸ்.பெர்னார்ட் பார்வையிட்டார்

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2க்கு உட்பட்ட பல்லாவரம் தெற்கு பகுதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழையால் பாதிக்க பட்ட மக்களை பாதுகாக்கும் சிறப்பு முகாமிற்கு நேற்று காலை பல்லாவரம் தெற்கு பகுதி செயலாளர் இ.எஸ்.பெர்னார்ட் அவர்கள் மற்றும் 27வது வார்டு மாமன்ற உறுப்பினர் T.K.கார்த்திகேயன் மகேஸ்வரி அவர்களுடன் சென்று அங்குள்ளவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.அப்போது மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலை சிற்றுண்டி அவர்களுக்கு அளித்தனர்
சென்னை காரப்பாக்கத்தில் மழைநீர் பாதிப்பால் சிக்கிய நடிகர் அமீர் கான் மற்றும் நடிகர் விஷ்னு விஷாலை மீட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் ..
மிக்ஜாம் புயல் மழை பாதிப்பால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு .
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், […]
காஞ்சிபுரம் மாவட்ட வெள்ளமிீட்பு பணிக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் முத்துசாமியை டிரக்டரில் அமரவைத்து வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட வண்டலூர்-மிஞ்சூர் வெளிவட்ட சாலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை ஓட்டி சென்றார்.
மின்சார சப்ளை கொடுக்கபோலிஸ் பாதுகாப்புடன் செல்லும் மின்சார ஊழியர்கள்.

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் புயல் வெள்ளம் பாதிப்பு கடுமையாக உள்ளது.குறிப்பாக முடிச்சூர் வரதராஜபுரம் போன்ற பகுதிகளை அடக்கிய மேற்கு தாம்பரம் தொடர்ந்து வெள்ளத்தில் தத்தளிக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்பட்டபோது முடிச்சூர் வரதராஜபுரம் பகுதிகளில் தண்ணீர் உள்ளே செல்ல முடியாமல் தேங்கி இருப்பதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதி ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளத்தில் தான் மூழ்கி தவிக்கிறது. காரணம் இந்த பகுதியில் ஏராளமான வீடுகள் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. […]
குரோம்பேட்டை ஷாக்கிங்.. நர்சிங் மாணவியை கொன்ற காதலன் கைது

கேரளமாநிலம் கொள்ளம் மாவட்டம் தென்மலா பகுதியை சேர்ந்த பக்ருதின் என்பரது மகள் பவுசியா(20), இவர் சென்னை குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மெடிகல் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே குரோம்பேட்டை நியூகாலணியில் உள்ள இமை பெண்கள் விடுதியில் தங்கிய நிலையில் கடந்த மூன்று நாட்களாக கல்லூரிக்கு செல்ல வில்லை. இந்த நிலையில் பவுசியாவின் தோழிகள் குரோம்பேட்டை சி.எல்.சி சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் காதலன் கேரளாவை மாநிலம் கொள்ளதை சேர்ந்த ஆசிக்(20) என்பவர் பவுசியாவை […]
குரோம்பேட்டை நியூ காலனிக்கு சங்கரய்யா பெயர் மாநகராட்சி தீர்மானம்

சுதந்திர போராட்ட தியாகியும், கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவரான என்.சங்கரையா சில தினங்களுக்கு முன் காலமானர். இந்த நிலையில் இன்று தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ஜி.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் வே.கருணாநிதி, ஜோசப் அண்ணாதுரை, டி.காமராஜ், இந்திரன், மதிமுக மாமன்ற உறுப்பினர் புஹிராபானு நாசர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் தாம்பரம் மாநகராட்சியின் 2 வது மண்டலகுழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை மறைந்த சங்கரையாவிற்கு புகழ் சேர்க்கும் விதமாக […]
சூறைக்காற்றுடன் மழை குரோம்பேட்டை நடைமேடை கூரை பறந்தது

சென்னை குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி சாலையை கடக்கும் விதமாகவும் ரயில் நிலையம் செல்வதற்க்கும் பொதுமக்கள் எளிதாக செல்லும் வகையில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கபட்டுள்ளது. இதனால் தினமும் ஏராளமானோர் இந்த நகரும் படிக்கட்டிகள் மூலம் ரயில் நிலையத்திற்க்கும், ரயில் நிலையத்திலிருந்து ஜி.எஸ்.டி சாலை வருவதற்க்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இன்று திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நகரும் […]
மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் குரோம்பேட்டை நியூ காலனி பாரதிபுரம் ஆகிய தெருக்களில் உள்ள பட்டாசு கழிவுகளை அகற்றினார்கள்

சேவா ரத்னா டாக்டர் வி,சந்தானம் தலைமையில் நடந்தது. இதில் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். மாநகராட்சி உதவியுடன் இந்த சேவை நடந்தது.