காங்கிரசை கண்டித்து குரோம்பேட்டையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்திய மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பாஜக சார்பில் இந்தியர்களை இழிவாக பேசிய காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடாவை கண்டித்து மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் சாம் பிட்ரோடாவை கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் […]
குரோம்பேட்டை ஏ.டி.எம். காவலாளி மினி வேன் மோதி பலி

தாம்பரம் அருகே நெஞ்சக மருத்துவமனை எதிரில் சாலையை கடக்க முயன்ற காவலாளி மீது மினி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை குரோம்பேட்டை மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் சேர்ந்தவர் பெருமாள் (77) தாம்பரத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் மில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு தாம்பரம் சானடோரியம் நெஞ்சக நோய் மருத்துவமனை எதிரே சாலையை கடக்க முயன்ற போது பல்லாவத்தில் இருந்து தாம்பரம் நோக்கி அதிவேகமாக […]
ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்துவது எப்படி ?பிரபல டாக்டர் பேட்டி

ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்துவது குறித்து குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை மருத்துவ நிபுணர் பேட்டி அளித்தார். ஆஸ்துமா விழிப்புணர்வு மற்றும் பராமரிப்பை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு உலக ஆஸ்துமா தினம் 7 மே 2024 அன்று அனுசரிக்கப்படுகிறது. நுரையீரலைப் பாதிக்கும் ஒரு தொற்று நோய், ஆஸ்துமா என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோயாகும்.குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர். பென்ஹூர் ஜோயல் ஷாட்ராக், ஆஸ்துமாவை நிர்வகித்தல் […]
குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் திமுக தண்ணீர் பந்தல் திறப்பு

பல்லாவரம் தெற்கு பகுதி திமுக சார்பில் குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி சாலையில் தண்ணீர் பந்தலை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி திறந்து வைத்தார். சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் அதிக அளவு வணிக நிறுவனங்கள் செயல்படுகிறது. நாள் தோரும் பல ஆயிரம் பேர் வந்து செல்கிறார். கடும் கோடை வெயில் நிலவுவதால் மக்களின் தாகத்தை போக்கும் விதமாக அங்கு பல்லாவரம் தெற்கு பகுதி திமுக சார்பில் குரோம்பேட்டையில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி திறந்து வைத்து குளிர்ச்சி […]
குரோம்பேட்டை அமல அன்னை ஆலய தேர் பவனி

200 ஆண்டுகள் பழமையான குரோம்பேட்டை அமல அன்னை ஆலைய தேர் திருவிழா, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அமல அன்னை தேர் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் அமைத்துள்ள 200 ஆண்டுகள் பழமையான அமல அன்னை ஆலையத்தில் தேர் திருவிழா இன்று நடை பெற்றது. முன்னதாக அருள் முனைவர் பிரன்சிஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நடைபெற்ற நிலையில் திரளானவர்கள் முன்னிலையில் வண்ண வண்ண மலர்களால் அளங்காரம் செய்யப்பட்ட அமல அன்னையின் […]
மனைவியைக் கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தாம்பரம் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகர் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வரபிரசாதம் (60) இவர் கட்டிட வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி விசுவாசம் (50) இவரும் வேறு பகுதியில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். மனைவி விசுவாசம் காலையில் வேலைக்கு சென்று மாலை நேரத்தில் வீட்டிற்க்கு வராமல் இரவு நேரத்தில் வீட்டிற்க்கு வந்ததால் […]
குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் பிரம்மாண்ட திருமண மண்டபம் திறப்பு

குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த கட்டுமான தொழில் நிறுவனமான சங்கர் கன்ஸ்ட்ரக்சன் சார்பில் அஸ்தினாபுரம் ராஜேந்திர பிரசாத் சாலையில் ஸ்ரீ சாஸ்தா மஹால் என்ற பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருவண்ணாமலை மங்கள காளி தேவஸ்தான ஸ்ரீ கருடானந்த சரஸ்வதி சுவாமிகள், மண்டபத்தை திறந்து வைத்து ஆசி வழங்கினார்.தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம், முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன், நந்தனம் வெங்கடேஸ்வரா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் தில்லை வள்ளல்.கே […]
குரோம்பேட்டையில் இரு சக்கர வாகனங்கள் மோதல் 2 வாலிபர்கள் உயிரிழப்பு

குரோம்பேட்டை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி சென்னை அடுத்து சேலையூர் அகரம் பகுதியை சேர்ந்தவர் ஹரி பிரசாத் (25). இவர் குரோம்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இன்று அதிகாலை வேலை முடிந்து ஹரி பிரசாத் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை டிபி மருத்துவமனை அருகே உள்ள சிக்னலில் திரும்பும் போது தாம்பரத்திலிருந்து குரோம்பேட்டை நோக்கி […]
குரோம்பேட்டை 35 வது வார்டில் திருப்பெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை ஆதரித்து வட்டசெயலாளர் எம்.கே.சண்முகம் தலைமையில் சின்னதம்பி, எம்.ஐ.டி.குமார் மற்றும் அதிமுகவினர் வாக்கு சேகரித்த போது எடுத்த படம்
குரோம்பேட்டையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

குரோம்பேட்டை கணபதிபுரம் மணி நாயக்கர் தெருவை சேர்ந்த ஜெசி ஜவகர் (வயது 60) சைதாப்பேட்டையில் பணியை முடித்துவிட்டு நேற்று மாலை வீட்டிற்கு நடந்து சென்று வந்து கொண்டிருந்த போது கணபதிபுரம் விவேகானந்தா தெருவில் சூளைப் பகுதியை சேர்ந்த அக்பர் வயது 22 பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்ற போது பொதுமக்கள் மடக்கி பிடித்து கட்டி வைத்து போலீசில் ஒப்படைத்தனர்.இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.