மாதர் சங்கத்தின் 53 ஆம் ஆண்டு விழா

குரோம்பேட்டை நியூ காலனி ஸ்ரீ வித்யா மாதர் சங்கத்தின் 53 ஆம் ஆண்டு விழா லட்சுமி அம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. டாக்டர் மீனா கபிலன் தலைமையேற்று சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார். விழா ஏற்பாடுகளை மாதர் சங்கத் தலைவி திருமதி ரமா சம்பத் துணைத் தலைவி திருமதி மல்லிகா பாலகுரு செயலாளர்கள் சாந்தா கிருஷ்ணன் சுமதி ராமச்சந்திரன் பொருளாளர் சரோஜினி முத்துகிருஷ்ணன் அரங்க ஜோதி மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
குரோம்பேட்டை பத்மநாப நகர் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வார வெள்ளி முன்னிட்டு அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்
குரோம்பேட்டை புருஷோத்தன் நகர் ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்
குரோம்பேட்டையில் துப்பாக்கி, கை விலங்குடன் மோசடி போலீஸ் கும்பல் கைது

குரோம்பேட்டையில் மருந்து விற்பனையாளரை போலீஸ் என கூறி துப்பாக்கி கை விலங்குடன் மிரட்டி 50 லட்சம் பறிக்க முயன்ற கும்பல் பிடிப்பட்டது.இதற்கு உதவிய வக்கீலும் பிடிபட்டார். குரோம்பேட்டையை சேர்ந்த மருந்து விற்பனையாளர் அசாரூதின்(32) மொத்தமாகவும், சில்லறையாகவும் மருத்துகளை குறைந்த விலையில் விற்பனை செய்து நல்ல லாபம் பார்த்துள்ளார். அதே குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை மருந்தக தலைமை அலுவலர் இம்ரான்(28).இவருக்கு அசாரூதின் தொழில் மீது ஒரு கண் விழுந்தது, அவரை துரத்திவிடவும் அல்லது மிரட்டிபணம் பறிக்க திட்டமிட்டார். […]
குற்றங்களை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம் தாம்பரம் போலீஸ் கமிஷனர்

குற்றங்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து சிசிடிவி கேமராக்களை இயக்கி வைத்த பின்னர் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் பேட்டியளித்தார். சென்னை அடுத்த குரோம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் நடைபெறும் குற்றங்களை கண்காணிப்பதற்காக தனியார் பங்களிப்புடன் ஜி.எஸ்.டி சாலையில் அமைக்கபட்டுள்ள 75 சிசிடிவி கேமராக்களை குரோம்பேட்டை காவல் நிலையத்திலிருந்து தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் இயக்கி வைத்தார். பின்னர் பேட்டியளித்த ஆணையர் அமல்ராஜ்:- குற்றங்களை […]
தாகூர் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பு

குரோம்பேட்டை தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடந்த 25 ஆண்டுகளாக ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறந்த முறையில் கல்விச் சேவையை செய்து வருகிறது. அந்த வகையில் மாணவச் செல்வங்கள் ஊடகத் துறையிலும் சிறந்து விளங்கும் பொருட்டு கடந்த கல்வி ஆண்டு (2023-2024) முதல் பி.எஸ்சி Visual கம்யூனிகேசன் மூன்று வருட பட்டப்படிப்பை திறம்பட நடத்தி வருகிறது. இங்கு மாணவர்களின் தொழில்நுட்ப நுண்ணறிவை மேம்படுத்தும் வகையில் Visual எபக்ட்ஸ், மல்டிமீடியா, 3D மாடலிங், வீடியோ […]
காங்கிரஸ் மூத்த தலைவர் பா.கார்மேகம் பட திறப்பு விழா.!

குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் காங்கிரசின் மூத்த தலைவர் பா. கார்மேகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நல குறைவு காரணமாக காலமானார்.அவருக்கு வயது 85. அவரது திரு உருவ பட திறப்பு விழா குரோம்பேட்டைநெமிலிச்சேரியில் உள்ள முத்துசாமி நகர் மெயின்ரோட்டில் உள்ள முன்னாள் பல்லாவரம் நகரசபை உறுப்பினர் அவரது மூத்த மகன் G. செல்வகுமார் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி.செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி. ஆர் .சிவராமன்.தாம்பரம் […]
தாம்பரத்தை சுற்றி சுற்றி 3 பேர் படுகொலை

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர் என மூன்று இடங்களில் வெவ்வேறு இடங்களில் 3 நபர்கள் வெட்டிக்கொல்லை குரோம்பேட்டையில் கடனை திருப்பி கேட்டபோது லாரி உரிமையாளரை வெட்டிக்கொலை, தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டுனர் சவாரிகாக காத்து இருந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டர். குன்றத்தூர் அடுத்த மலையம்பாக்கத்தில் செங்கல் சூளை கூலி தொழிலாளியை வெட்டி 3 ஆயிரம் பணம், ஒரு செல்போன் பறிப்பு சம்பவத்தில் மருத்துவமனையில் உயிரிழப்பு, மூன்று பேருக்கு போலீஸ் வலை சென்னை அடுத்த குரோம்பேட்டை டி.எஸ் லட்சுமணன் நகர் […]
மூத்த காங்கிரஸ் தலைவர் கார்மேகத்திற்கு அஞ்சலி உருவப்படம் திறப்பு

மூத்த காங்கிரஸ் தலைவர் கார்மேகம் காலமானார். செங்கற்பட்டு மாவட்டத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் பா.கார்மேகம் கடந்த 23.5.2024 அன்று குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் உள்ள அவரது மகன் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்லகுமார் இல்லத்தில் வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலக் குறைவாலும் காலமானார். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மீது அளவற்ற பற்று கொண்டு செயல்பட்டவர்.சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத், தலைவர் வாழப்பாடியார், கவிஞர் கண்ணதாசன், எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்ற தலைவர்களுடன் இணைந்து பணியாற்றிவர். தந்தை பெரியாரின் கருத்தால் ஈர்க்கப்பட்டு […]
குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் திருமண கோஷ்டி வேன் கவிழ்ந்து விபத்து

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர்களின் வேன் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் உட்பட வேனில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சேலத்தில் இருந்து சென்னை எழுப்பூரில் நடைபெறும் திருமணத்திற்க்காக 12 பேர் மஹேந்திரா டூரிஸ்டர் வேன் ஒன்றில் ஜி.எஸ்.டி சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர் வேனை சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜெய் சாந்த் (24) ஓட்டி வந்துள்ளார். அப்போது குரோம்பேட்டை ,எம்.ஐ.டி மேம்பாலம் அருகே வேனின் டயர் திடிரென வெடித்ததால் சாலையில் இருந்த தடுப்பு […]