பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு தரிசனம்
குரோம்பேட்டை பத்மநாப நகர் ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாதாரணை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கருமாரி அம்மனை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் புத்தாண்டை முன்னிட்டு கேசரி வழங்கப்பட்டது.
குரோம்பேட்டை புருஷோத்தம நகர் ஸ்ரீ சாஸ்தா சேவா சங்கம் சார்பில் விளக்கு பூஜை
குரோம்பேட்டை புருஷோத்தமநகர் ஸ்ரீ சாஸ்தா சேவா சங்கம் சார்பில் 47 ஆம் ஆண்டு லட்சார்ச்சனை வைபவம், புவனேஸ்வரி நகர் ஸ்ரீ அபிராமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து புதன்கிழமை காலை 5:30 மணியளவில் மகா கணபதி ஹோமம் நடந்தது 9 மணி அளவில் திருவிளக்கு பூஜை ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜை வழிபாடு செய்தனர். மாலை 4 மணி அளவில் ஸ்ரீ ஐயப்பனுக்கு […]
புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
1) காமராஜர் சாலையில் போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை இன்று இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படும். 2) அனைத்து மேம்பாலங்களிலும் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. 3) மெரினா கடற்கரை உட்புற சாலையில் இன்று இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து மூடப்படும். வாகனங்கள் நிறுத்த […]
ராதா நகர் சுரங்கப்பாதை தாமதம்:
ரயில்வே பதில் அளிக்க கோர்ட் உத்தரவு குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை 20 வருடமாக தாமதமாய் வருகிறது .இது தொடர்பான வழக்கில் ரயில்வே துறையினர் பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2,3 குடியிருப்போர் நலச்ஙக்கங்களின் இணைப்புமையம் சார்பில் சுமார் 15 வருடங்களாகியும் முடிவு பெறாத ராதாநகர் சுரங்கப்பாதை பணி குறிப்பாக சுரங்கப்பாதையிலிருந்து ரயில் நடைமேடைக்கு செல்ல படிக்கட்டுக்கள் அமைக்க, எஸ்கலேட்டர் அமைக்க வலியுறுத்தி அனைத்து மட்டத்திலும் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் பயன் இல்லாத நிலையில் […]
அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் வாழ்த்து
செம்பாக்கம் தி.மு.க.வடக்கு பகுதி செயலாளர் ஏ.கே கருணாகரன் தனது பிறந்த நாளை முன்னிட்டு சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்
தாம்பரம் அருகே வீடு புகுந்து கொள்ளை | 2 பேர் கைது
சென்னை மேற்கு தாம்பரம் அடுத்த ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (60) இவர் வீட்டின் முதல் மாடியில் தனது மனைவி வேளாங்கனி மற்றும் மூத்த மகன் வினோத்குமார் என்பவருடன் வசித்து வருவதாகவும் கீழ் தளத்தில் இளைய மகன் சதீஷ்குமார் அவரது மனைவி ராதா ஆகியோர் வசித்து வருகின்றனர். சென்ற மாதம் தல பொங்கலுக்கு கீழ் தளத்தில் உள்ள தனது மகன் சொந்த ஊர் சென்றிருந்த நிலையில் சேகர் காலை கீழே உள்ள வீட்டை சுத்தம் செய்துவிட்டு சென்றவர் […]
பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் ஐயப்ப சுவாமி 51 ஆம் ஆண்டு மலர் பூஜை
குரோம்பேட்டை பத்மநாபன் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு 51 ஆம் ஆண்டு மலர் பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் மகா கணபதி ஹோமம், 51 வகை சிறப்பு அபிஷேகம்,சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்று மதியம் ஒரு மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்னதான உபயதாரர் சங்கர் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர்கள் நித்யா சங்கரநாராயணன் மற்றும் சங்கரநாராயணன் தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கினர். […]
குரோம்பேட்டையில் நடிகை ஆண்ட்ரியா தொடங்கி வைத்த வாக்கத்தான் போட்டி

குரோம்பேட்டையில் பார்வதி மருத்துவமனை சார்பில் அனைவருக்கும் சேர்த்தல் என்ற கருப்பொருளில் ஐந்தாம் ஆண்டு வாக்கத்தான் போட்டியில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட 5000 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதனை நடிகை ஆண்ட்ரியா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். சிட்லபாக்கம் எம். ஐ .டி கல்லூரி விளையாட்டு திடலில் குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை சார்பில் அனைவருக்கும் சேர்த்தல் என்ற கருப்பொருளில் அதன் 5வது ஆண்டு பெருநடை (வாக்கத்தான்) போட்டி நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக […]
குரோம்பேட்டையில் ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளை

குரோம்பேட்டை போஸ்டல் நகர், தனலட்சுமி தெருவை சேர்ந்தவர் மாலதி ராணி இவர் பொத்தேரி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இவரது வீட்டில் பால அரவிந்த் என்பவர் மனைவியுடன் வாடகைக்கு தரைதளத்தில் குடியிருந்து வருகிறார்..மாலதி ராணி அடையாரில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்வாடகைக்கு குடியிருந்த பால அரவிந்த் மனைவி மற்றும் உறவினர்களுடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க சென்றார்.. இருவரும் இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவுகள் […]
குரோம்பேட்டை ஜிஎஸ்டி ரோட்டில் உள்ள எஸ்கலேட்டர் பழுதாகி உள்ளது. கடந்த ஒரு மாதமாக அது பழுது பார்க்கப்பட வில்லை. நெடுஞ்சாலைத்துறை பழுது பார்க்காததை கண்டித்து குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அதன் தலைவர் வி. சந்தானம், போலீஸ் கிருஷ்ணமூர்த்தி, வணிகர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன், அர்கீஸ்வரர் காலனி நலச் சங்கத்தின் செயலாளர் தன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர்.