தங்கம் விலை அதிரடி உயர்வு

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றம் இறக்கம் என மாறி மாறியே இருந்து வருகிறது. இதனால் மக்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். தங்கத்தை இப்போதே வாங்கலாமா.. இல்லை கொஞ்ச நாள் காத்திருக்கலாமா என்பதில் மக்களுக்குக் குழப்பம் இருக்கிறது. இதற்கிடையே இன்றைய தினம் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

TODAY GOLD RATE

சென்னையில் இன்றைய தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8720க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 69,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை

நேற்று (மே 12) 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் விலை ரூ.8750-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.70,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (மே 13) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் விலை ரூ.8765-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை குறைவு

வாரத்தின் முதல் நாளான(திங்கள்கிழமை) தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8880க்கும், சவரனுக்கு ரூ. 1320 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.71,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை

இன்று (மே 8) தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் படி கிராமுக்கு அதிரடியாக ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,130க்கும் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.73,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.