சென்னை குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதை திறக்கப்பட்டாலும் தொடரும் பிரச்சினைகள்

சென்னை குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதை ஜனவரி 7-ந் தேதி திறக்கப்பட இருக்கிறது.  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த சுரங்கப்பாதையை திறந்து வைக்கிறார். ராதா நகர் சுரங்கப்பாதை 17 ஆண்டுக்கு பிறகு பயன்பாட்டுக்கு வந்தாலும் அதில் நீடிக்கும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும், என்று குடியிருப்போர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ரயில் நிலையத்திற்கு கிழக்கே 2.5 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் ராதா நகர் ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். […]

பொங்கலுக்கு 22,797 சிறப்பு பஸ்கள் பேருந்துகளை இயக்க முடிவு

பொங்கலை ஒட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்காக 22 797 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது .வரும் ஒன்பதாம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இந்த பஸ்ஸில் இயக்கப்படும். இதற்காக கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம், பகுதிகளில் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பொங்கலுக்கு தென் மாவட்டங்களுக்கு ஊருக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பழைய மகாபலிபுரம் சாலை, திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு வழி அல்லது வண்டலூர் வெளி சுற்றுச்சாலையை தேர்வு செய்து பயன்படுத்துமாறு அமைச்சர் […]

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் திமுக ஆட்சிக்கு பின்னடைவு

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது சரியானது. அறநிலைத்துறை கோவில் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும் அந்த தீபத்தூண் கோவில் எல்லைக்குள் தான் உள்ளது என்று அதிரடியாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு அரசே காரணம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அர்த்தமற்றது என நீதிபதிகள் […]

பட்டியல் இன தம்பதிகளுக்கு இலவச கான்கிரீட் வீடு – எடப்பாடி வாக்குறுதி

தமிழகத்தில் வீடு இல்லாதவருக்கு வீடு கட்டி கொடுக்க பசுமை வீடுகள் திட்டம் கலைஞர் கனவு இல்லம் திட்டம் ,பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் ஆகிய வீடுகள் உள்ளன.இந்த நிலையில் எடப்பாடி பேசுகையில் “திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் செல்லும் பட்டியலின தம்பதிகளுக்கு இலவச கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும்” என்று கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.

நாளை மாற்றப்பட இருந்த பிராட்வே பேருந்து நிலைய இடமாற்றம் தள்ளிவைப்பு

“பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் 07.01.2026 முதல் தீவுத்திடல் மற்றும் ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள பதிவில், நிர்வாக காரணங்களால் இந்த பேருந்து நிலையம் மாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.பிராட்வே பஸ் நிலையம் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’ இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல் கவர்னரிடம் எடப்பாடி பரபரப்பு புகார்

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாகவும் இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், என்றும் தமிழக கவர்னரிடம் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் கவர்னரை சந்தித்து ஊழல் பட்டியலை கொடுத்து, ஒவ்வொரு துறைகளும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக தனது மனுவில் அவர் கூறியிருக்கிறார்.

கரூர் சம்பவம் – விஜய்க்கு சிபிஐ சம்மன்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் கூட்டத்தில் நெரிசலின் சிக்கி 41 பேர் பலியானார்கள் இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.ஏற்கனவே டெல்லியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் விசாரணை நடந்தது. தற்போது இந்த வழக்கில் நடிகர் விஜய் விசாரிக்கப்படுகிறார். இதற்காக அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,02,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது

வங்கக் கடலில் உருவான புயல் சின்னம்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. தென் கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் இந்திய பெருங்கடல் பகுதியை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம். அறிவித்துள்ளது

முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி – மத்திய அமைச்சர் முருகன்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உறுதி செய்துள்ளது. முருக பக்தர்களின் உணர்வுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.