தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி -புதிய தலைவர் உறுதி
பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராக நிதின் நவீன் இன்று அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். அவர் அளித்த பேட்டியில் தமிழ்நாடு கேரளா மேற்குவங்கம் குறிப்பிட ஐந்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும். கார்த்திகை தீபத்தை எதிர்ப்பவர்களுக்கும் ராமர் பாலத்தை மறுப்பவர்களுக்கும் அரசியலில் இடமில்லை மரபுகளை தடுக்க முயற்சிக்கும் சக்திகளை எதிர்கொள்வது அவசியம் என்று கூறியுள்ளார்.
சபரிமலை தங்கம் திருட்டு தமிழகத்தில் அமலாக்க பிரிவு சோதனை
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருடப்பட்டதன் மூலம் கிடைத்த சட்டவிரோத வருமானத்தை பணமோசடி செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 21 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மோடி கூட்டத்தில் தினகரன் பங்கேற்பு
23ஆம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் NDA பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்று அதிகாரப்பூர்வமாக இணைகிறார். அந்த கூட்டத்திற்கு அமமுக தொண்டர்களை அழைத்து வருமாறு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு.
தமிழக காங்கிரசுக்கு புதிய மாவட்ட தலைவர்கள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் மொத்தம் 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையில் தமிழக காங்கிரசார் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.
வருகிற பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறினர். பெயர் சேர்ப்பதற்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. பெயர் சேர்க்க வரும் 30ம் தேதி வரை அவகாசம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பராசக்தி ஹீரோ நான் தான் – சீமான்
பராசக்தி’ படத்தில் வரும் செழியன் நான் தான். தமிழ் வாழ்க என சிவகார்த்திகேயன் கத்துவதைப் பார்க்கும் போது, நானே கத்தியது போல இருந்தது” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.170 உயர்ந்து, ரூ.13,450க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று ஒரு கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.318 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.8,000 உயர்ந்து ரூ.3,18,000க்கு விற்பனையாகி வருகிறது.
அஜித் குமார் உடன் கார் பந்தயத்தில் செல்ல கட்டணம்
துபாயில் கார் பந்தயம் நடைபெற்று வருகிறது இதில் அஜித் குமார் ரேசிங் அணி தொடர்ந்து பங்கேற்று வருகிறது. வரும் 25ஆம் தேதி துபாய் ஆட்டோடிரோமில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது அஜித்குமார் ஓட்டும் காரில் அவருடன் செல்வதற்கு 86 ஆயிரத்து 475 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது யார் வேண்டுமானாலும் இந்த பணத்தை கட்டி காரில் அவருடன் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது.
நடிகர் விஜய் இடம் சி.பி.ஐ அதிரடி கேள்வி
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக மீண்டும் டெல்லிக்கு போய் உள்ளார்.இன்று அவரிடம் இரண்டாவது கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசும் போதே நெரிசல் ஏற்பட்டது உங்களுக்கு தெரியாதா? என்பது உட்பட பல கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டனர் .வழி நெடுக அலங்கார வளைவுகள் இருந்ததால் கூட்டத்துக்கு வர தாமதம் ஆனதாக விஜய் கூறினார். இது தொடர்பான ஆதாரங்களை உடனே காட்டும் படி சி.பி.ஐ உத்தரவிட்டது.
புதிய நீர்த்தேக்கம் அமைக்க எதிர்ப்பு
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாமல்லபுரம் அருகே புதிய நீர்த்தேக்கம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அவர் கூறும் போது வளரும் சென்னையின் தேவை தீர்க்க ஒரு வரலாற்று முயற்சி! கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் 342.60 கோடி ரூபாய் செலவில், 5,161 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள மாமல்லன் நீர்த்தேக்கம் எனும் மாபெரும் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன் என்றார்.இதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் ஏற்பு தெரிவித்துள்ளார்.