தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பொதுச்சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம், இன்று வியாழக்கிழமை ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக தவெக தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ, விசில் மற்றும் கிரிக்கெட் மட்டை ஆகிய 3 சின்னங்களை கோரி தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. தற்போது விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு…

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த வைரமுத்துவிற்கு அங்கு இருந்த வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் தெரிய வரவில்லை. நல்வாய்ப்பாக செருப்பு கவிஞர் வைரமுத்து மீது படாமல் தவறி விழுந்தது.இதையடுத்து, வழக்கறிஞர்கள் வைரமுத்துவை உடனடியாக பாதுகாப்பாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கூட்டணியை இறுதி செய்ய அதிமுக பாஜக தீவிரம்

கூட்டணியை இறுதி செய்ய அதிமுகவும் பாஜகவும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இன்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தலைமையில் பாஜக தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, அப்போது யாருக்கு எத்தனை தொகுதி என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கூட்டணியில் மற்ற கட்சிகளையும் பேசி முடித்து பிரதமர் சென்னை வரும்போது மேடையில் ஏற்றுவதற்காக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சிவகார்த்திகேயன் தத்து எடுத்த வெள்ளை புலி மரணம்.

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலி மரணமடைந்தது நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு வெள்ளைப்புலி உயிரிழந்தது. இதேபோல பூங்காவில் பரா மரிக்கப்பட்டு வந்த 22 வயதான ரமேஷ் என்ற சிறுத்தை வயது மூப்பு காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் பூங்கா டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர் இருப்பி னும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் சிறுத்தை பரிதாபமாக இறந் தது. உயிரிழந்த வெள்ளைப்புலி மற்றும் சிறுத்தையை மீட்ட ஊழியர்கள் பூங்கா வளாகத் […]

தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் மோடியும் தமிழ்நாட்டில் பழனிசாமியும் தலைவர்களாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி முழுமையாக திமுக அரசை அகற்றும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல். திமுக குடும்ப ஆட்சியில் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் இபிஎஸ் – பியூஷ் கோயல் கூட்டாக பேட்டி.

கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் துரதிர்ஷ்டவசமானது – உச்ச நீதிமன்றம் வேதனை

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது; அதில் தலையிட்டு எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. பரப்புரைக் கூட்டத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து.

ஆகஸ்ட் வரை கடும் குளிர் ஏற்படுமா? – வாட்ஸ்அப்பில் வரும் தகவலின் உண்மை என்ன?

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள், குறிப்பாக வாட்ஸ்அப்பில் பரவி வரும்“Aphelion காரணமாக ஆகஸ்ட் மாதம் வரை கடும் குளிர் நிலவும்” என்ற தகவல் முழுமையாக பொய்யானது என வானிலையாளர் முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் தெளிவுபடுத்தியுள்ளார். வாட்ஸ்அப்பில் பரவும் தகவல்களில், Aphelion என்பது ஒரு கோள் என்றும், அது சூரியனைச் சுற்றி வருவதால் பூமி அதிக தூரம் சென்று கடும் குளிர் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இது அறிவியலுக்கு முற்றிலும் எதிரான தவறான தகவல் என வானிலையாளர் […]

4 நாட்கள் வங்கி சேவை முடங்கும் அபாயம்..! நாடு முழுவதும் வரும் 27ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்..!

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு. கோரிக்கையை நிறைவேற்ற சம்மதித்தால் நாள்தோறும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணி செய்வதாகவும் ஒப்புதல். வரும் 24ஆம் தேதி 4வது சனிக்கிழமை, 25ஆம் தேதி ஞாயிறு, 26ஆம் தேதி குடியரசு தின விடுமுறை, அதற்கு அடுத்த நாளான 27இல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் 4 நாட்கள் வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

“உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சு வெறுப்புப் பேச்சே”: உயர்நீதிமன்ற மதுரை கிளை

சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் 2023ஆம் ஆண்டு வெளியிட்ட கருத்துகள் வெறுப்பு பேச்சு (Hate Speech) ஆகும் என்றும், அது இந்துமதத்திற்கு எதிரான வெளிப்படையான தாக்குதல் என்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் கருத்துகள் இனப்படுகொலை (Genocide) மற்றும் பண்பாட்டு அழிப்பு (Culturicide) என்ற உணர்வுகளை உருவாக்குவதாகக் கூறி, அவை வெறும் அரசியல் விமர்சனமாக மட்டுமே பார்க்க முடியாது என்ற கருத்தையும் நீதிமன்றம் பதிவு செய்தது. உதயநிதி ஸ்டாலின் சார்ந்துள்ள திமுக […]

டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

என்டிஏ கூட்டணியில் இன்று இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியிலிருந்து மக்களைக் காப்போம். தமிழகத்தை மீட்போம்.