சிட்லபாக்கத்தில் பள்ளிகளுக்கு மத்தியில் தேங்கி நிற்கும் கழிவு நீர் : | மாணவர்கள் அவதி

சிட்லபாக்கத்தில் 3 பள்ளிகளுக்கு மத்தியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காத நிலை இருந்து வருகிறது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சி 43 வது வார்டு காந்தி தெரு விரிவுக்கு அருகாமையில் உள்ள 37 ஆவது வார்டு வழியாக கழிவு நீர் வந்து கொண்டிருக்கிறது.இது அங்குள்ள மூன்று பள்ளிக்கூடங்களுக்கு மத்தியில் சென்று வாசலில் தேங்கி நிற்கிறது.கடந்த மூன்று வருடமாக இந்த பிரச்சனை நீடித்து வருகிறது.இது […]

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்களை பூமி திரும்பியதற்கு மதிமுக மாமன்ற உறுப்பினர் புஸிராபானு நாசர் சல்யூட் அடித்து வரவேற்பு

தாம்பரம் மாநகராட்சி 2 வது மண்டலகுழு கூட்டம் மண்டலக் குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை தலைமையில் கூடியது.இதில் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.அப்போது பேசிய மண்டலக் குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை தாம்பரம் மாநகராட்சியின் 2025-26 ம் ஆண்டுகான நிதி நிலை அறிக்கையில் 91 திட்டங்கள் நமது இரண்டாவது மண்டலத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்து அதனை பட்டியலிட்டு படித்து காட்டினார். அதனை தொடர்ந்து 4.15 கோடி ரூபாய் கான சாலை, மழைநீர் வடிகால் […]

அஸ்தினாபுரம் செல்லும் சாலையில் ஓடும் சாக்கடை நீர் | கண்டுகொள்ளாத மேயர்

தாம்பரம் மாநகராட்சி ராஜேந்திர பிரசாத் சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக பாதாள சாக்கடை மேனுவல் உடைந்து கழிவு நீர் வெளியேறி சாலை முழுவதும் ஆறாக ஓடும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் மக்கள் கடும் அவதி பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள்,மேயர், மண்டல தலைவர், மாமன்ற உறுப்பினர் மக்கள் கடும் குற்றச்சாட்டு சென்னை குரோம்பேட்டை அடுத்த ராஜேந்திர பிரசாத் சாலை, அஸ்தினாபுரம் செல்லும் முக்கிய பிரதான சாலை இச்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன இதன் […]

தாம்பரம் இரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்காத பயணியும் பரிசோதனை அதிகாரியும் கைகலப்பு

செங்கல்பட்டுவில் இருந்து சென்னை கடற்கரை சென்ற மின்சார ரெயிலில் முதல்வகுப்பு பெட்டியில் லோகேஷ்(37) என்பவர் பயணித்துள்ளார்.அப்போது தாம்பரம் வருமுன்பாக பெண் டிக்கெட் பரிசோதகர் பிரித்தி சோதனை செய்தபோது முதல் சாதாரண பெட்டியில் பயணம் செய்யும் டிக்கட் மட்டும் எடுத்தது தெரிய வந்தது, இதனால் தாம்பரத்தில் அபராத தொகை வசுலிக்க கூட்டிச்சென்ற நிலையில் தப்பியோடியுள்ளார், பெண் டிக்கெட் பரிசோதகர் பிடிக்க சொல்லி குரல் எழுப்பியதால் அங்கு டீ குடித்துக்கொண்டு இருந்த பேனிஷ் என்கிற டி.டி.ஆர் உள்ளிட்ட இருவர் பிடித்துள்ளனர், […]