தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை நீட்டிப்பு நீர்வரத்து சீரானதும் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் – காவல்துறை மெயின் அருவி, பழைய குற்றால அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
5வது நாளாக தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹640 உயர்ந்து, ₹57,800-க்கும் ஒரு கிராம் ₹7,225க்கும் விற்பனையாகிறது
தமிழகத்தில் 26ம் தேதி மிக கனமழை

“தென் தமிழகத்தில் வருகிற 26ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு” இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை “தென் தமிழகத்தில் 25 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” “கடலோர ஆந்திரா, ஏனாம், கேரளா, மாகே பகுதிகளில் வரும் 26, 27 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு” “நிக்கோபார் தீவுகளில் 22 முதல் 24 வரை கனமழைக்கு வாய்ப்பு” “ராயலசீமாவில் 26 மற்றும் 27 ஆம் தேதி கனமழை பெய்யும்”
மின்சார ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று முதல் 28 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே 14 ரயில்கள், தாம்பரம்-கடற்கரை இடையே 14 ரயில்கள் ரத்து; இரு மார்க்கங்களிலும் 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 200 ரயில்கள் இயக்கப்படும்
கீழ்கட்டளை ஏரியில் ஆக்கிரமிப்பு

கீழ்கட்டளை ஏரியில் வடக்கு பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்து வருகின்றன .ஒரு சிலர் தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி அதில் சுவர் கட்டி இருந்தனர் .அதனை அரசு அகற்றினாலும் முழுவதுமாக சுவரின் அஸ்திவாரம் உள்பட முழுவதும் அகற்றப்படாததால் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அந்த பகுதியில் சுவர் கட்ட தொடங்கினர்.இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணி தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு அகற்ற முயற்சிக்கும் போது அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் தடுத்து […]
தவெக மாநாட்டில் பங்கேற்ற நிர்வாகிகளை நுண்ணறிவு பிரிவு போலீசார் தொடர்பு கொண்டு தகவல்களை சேகரித்ததாக தகவல்

சென்னையில் இருந்து நிர்வாகிகள் எவ்வளவு பேர் மாநாட்டில் கலந்து கொண்டார்கள் என்பது குறித்து தகவல்கள் சேகரித்து வருவதாக தகவல் சென்னையில் தவெக தொண்டர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்தும் விவரங்களை சேகரித்து வருவதாக தகவல்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி, வரும் 24ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு
நவ.24ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கீழ் செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் தகவல் தொடர்பு சேவை மேம்படுத்துவதற்காக ஜிசாட் N2 செயற்கைக்கோளை வடிவமைத்தது. 4700 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அதி நவீன செயற்கைக்கோள் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி நள்ளிரவு 12.00 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் ராக்கெட்டில் […]
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜர்

அறப்போர் இயக்கத்திற்கு எதிரான அவதூறு வழக்கில் டிசம்பர் 11ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு
கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

மேலும் 2 நாட்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வலியுறுத்திய மருத்துவக் குழு எனினும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார் மருத்துவர் பாலாஜி அடுத்த 6 வார காலம், மருத்துவர் பாலாஜி மருத்துவ விடுப்பில் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல்.