கிழக்கு கடற்கரையில் கடல் கொந்தளிப்பு

பெஞ்சல் புயல் இன்று மாலையை கரையைக் கடக்கக் கூடிய கிழக்கு கடற்கரை சாலை பகுத்இ கடல் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது. பல அடி உயரத்துக்கு ஆக்ரோஷமாக பேரலைகள் சீறி எழுகின்றன.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,745 கனஅடி

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து காலை 449 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 3,745 கனஅடியாக உயர்வு; ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் தற்போது 2,313 மில்லியன் கன அடியாக நீர்இருப்பு உள்ளது; 4 மணி நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 8 மடங்கு அதிகரித்துள்ளது

1மணிவரை தீவிர மழைக்கு வாய்ப்பு

சென்னையில் பகல் 1 மணிவரை தீவிர மழைக்கு வாய்ப்பு செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரத்திலும் கனமழை தொடரும் -வானிலை ஆய்வு மையம்

கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு

இடைவிடாது பெய்யும் கனமழையால் கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் கூவம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரைக்கு திருப்பிவிடப்பட்ட விமானம்

சென்னைக்கு வந்த விமானம் மோசமான வானிலையால் மதுரைக்கு திருப்பிவிடப்பட்டது. மாலை வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் 1 வரை அதீத கனமழைக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது – வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை.

சட்டப் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் அனைத்து தேர்வுகளும் இன்று ஒத்திவைக்கப்படுவதாக பதிவாளர் அறிவித்துள்ளார். இந்த தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என பின்னர் அறிவிக்கப்படும்.