சென்னையில் மின்சார ரயில் சேவையில் தாமதம்

சென்னை கோடம்பாக்கத்தில் மின்சார ரயில் வராததால் சுமார் ஒருமணிநேரம் ரயில்கள் இன்றி பயணிகள் ரயில் நிலையத்தில் தவித்து வருகின்றனர். ரயில் சேவை குறைக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்த நிலையில் மின்சார ரயில்சேவை தாமதமாகி வருகிறது.
மாவட்டங்களில் நாளை மருத்துவ முகாம்கள் – தமிழக அரசு
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் நாளை மருத்துவ முகாம்கள் நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாறு ஆற்றில் வெள்ளம் – 8,000 கனஅடிநீர் வெளியேற்றம்

சென்னை அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு அடையாறு ஆற்றில் பாய்ந்தோடும் 8,000 கனஅடி நீர் முடிச்சூர் மணிமங்கலம் சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள கார்கள் கனமழையால் அடையாறு ஆற்றில் 8 ஆயிரம் கன அடி வெள்ள நீர் செல்கிறது அடையாறு ஆற்றில் செல்லும் வெள்ளநீர், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் புகுந்தது
பறக்கும் ரயில் சேவை ரத்து.

சென்னையில் பலத்து காற்றுடன் மழை பெய்து வருவதால், சென்னை கடற்கரை – வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு. ரயில் சேவை தொடர்பான தகவலுக்கு 044-25330952, 044-25330953 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரம் ரெட் அலர்ட்
கிளாம்பாக்கத்தில் சாலையில் துள்ளிய விரால் மீன்கள். போலீஸ்காரர் மீன்பிடித்த காட்சி

ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தினால் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு முதல் தற்போது வரை காற்றுடன் கூடிய கனமழையானது சென்னை புறநகர் பகுதிகளான வண்டலூர், பெருங்களத்தூர் தாம்பரம் பல்லாவரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் விடாமல் கன மழை பெய்து வருகிறது இந்த நிலையில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் கால்வாயில் அடைப்பு இல்லாமல் மழைநீர் வெளியேற செய்த போக்குவரத்து காவலர்கள் இருவர் […]
குரோம்பேட்டை மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்தது

சென்னை புறநகர் பகுதிகளில் காலை முதல் கன மழை பெய்து வருகிறது இந்த நிலையில் குரோம்பேட்டை பகுதியில் அரசு பொது மருத்துவமனை மற்றும் நெஞ்சக மருத்துவமனை செயல்பட்டு வருகிறது கனமழை காரணமாக பொது மருத்துவமனை தரைதளத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் குறிப்பாக குரோம்பேட்டை பகுதியில் உள்ள டிபி மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது இதனால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் தங்கி இருக்கும் உறவினர்கள் மருத்துவமனைக்கு உள்ளே வரவும் […]
குரோம்பேட்டை சாலைகளில் ஆறாக ஓடும் வெள்ளம்.

பெஞ்சம் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆங்காங்கே அதி கன மழைகள் பெய்து வருகின்றன குரோம்பேட்டை தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரம் விநாயகர் கோவில் அருகில் வள்ளுவர் ஹை ரோட்டில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை காணலாம் மேலும் வணிக நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள ஸ்டேஷன் சாலை அனுமார் கோயில் சாலைகளில் வெள்ளம் சாலைகளில் முட்டி அளவு தண்ணீர் சாலைகளில் செல்கிறது அது போக காந்திஜி நகர் பகுதிகளிலும் காந்திஜி நகர் வள்ளுவர் தெரு மூன்றாவது குறுக்கு […]
கிளம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் துள்ளிய விரால் மீன்கள், நீரை வெளியேற்றிய போக்குவரத்து காவலர் ஒருவர் மீனை பிடித்தத்து சென்றார்
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தினால் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு முதல் தற்போது வரை காற்றுடன் கூடிய கனமழையானது சென்னை புறநகர் பகுதிகளான வண்டலூர், பெருங்களத்தூர் தாம்பரம் பல்லாவரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் விடாமல் கன மழை பெய்து வருகிறது இந்த நிலையில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் கால்வாயில் அடைப்பு இல்லாமல் மழைநீர் வெளியேற செய்த போக்குவரத்து காவலர்கள் இருவர் […]
கனமழை எதிரொலியாக சென்னையில் புறநகர் ரயில் சேவை குறைக்கப்பட்டது

மறு அறிவிப்பு வரும் வரை குறைந்த எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நேற்று உருவான ஃபெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃபெஞ்சல் புயல் […]