Tambaram Dec 15 to Dec 21 Issue 34
Chrompet Dec 15 to Dec 21 Issue 34
பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் ஐயப்ப சுவாமி 51 ஆம் ஆண்டு மலர் பூஜை
குரோம்பேட்டை பத்மநாபன் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு 51 ஆம் ஆண்டு மலர் பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் மகா கணபதி ஹோமம், 51 வகை சிறப்பு அபிஷேகம்,சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்று மதியம் ஒரு மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்னதான உபயதாரர் சங்கர் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர்கள் நித்யா சங்கரநாராயணன் மற்றும் சங்கரநாராயணன் தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கினர். […]
இன்றைய தங்கம் நிலவரம் 11.12.2024
சென்னை எழும்பூரில்2,000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்.
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற நிலையில் கைது.
நாளை (டிச.11) 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு
BREAKING || தெற்கு மத்திய வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது

மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை – தமிழக கடற்கரையை அடுத்த 24 மணி நேரத்தில் அடையக்கூடும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
கார்த்திகை தீபத்தையொட்டி தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

விழுப்புரத்தில் இருந்து தி.மலைக்கு 2 ரயில்களும், திருச்சியில் இருந்து தி.மலை வழியாகவேலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை

அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த பாஜக, பாமக வலியுறுத்துமா? சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு வரும் டிச.13ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு.

அதனை ஈடுசெய்யும் வகையில் டிச.21ம் தேதி வேலைநாளாக அறிவிப்பு.