வாடிக்கையாளர்களை ஈர்க்க வாட்ஸ் அப் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது ஆவணங்களை ஸ்கேன் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது

இதனால் மூன்றாம் தரப்பு செயலிகளை ஸ்கேனிங்கிற்கு பயன்படுத்த தேவையில்லை. வாட்ஸ் அப்பில் ஸ்கேன் செய்து அப்படியே ஆவணங்களை அனுப்பலாம். முதல்கட்டமாக IOS பயனர்களுக்கு இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆன்ட்ராய்டு போன்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவா களைகட்டி உள்ளது.

இந்நிலையில், வடக்கு கோவாவில் உள்ள கலங்குட் கடற்கரை பகுதியில் இருந்து ஒரு சுற்றுலா படகு நேற்று சென்று கொண்டிருந்தது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் கெட் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் உள்பட 21 பேர் பயணம் சென்றனர். அரபி கடலின் நடுவே சென்று கொண்டிருந்த சுற்றுலா படகு அதிக பாரம் காரணமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் கடலில் தத்தளித்து கொண்டிருந்த அனைவரையும் மீட்டு […]
+8, +85, +65 எண்களில் இருந்து அழைப்பா?

பொதுமக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!. அறிமுகமில்லாத சர்வதேச அழைப்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி, தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதுபோன்ற அழைப்புகள் வந்தால், தொலைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொலைத்தொடர்பு துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. சர்வதேச மோசடி அழைப்புகள் தடுப்பு தொழில்நுட்பம், கடந்த அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில், பெறப்பட்ட சர்வதேச அழைப்புகளில், 1.35 கோடி அழைப்புகள் அதாவது 90 சதவீதம், இந்திய தொலைபேசி எண்களில் […]
சபரிமலையில் ஐயப்ப விக்கிரகத்தில் நேற்று மாலை தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.

இன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 16ம் தேதி தொடங்கிய 41 நாள் நீண்ட மண்டல காலம் இன்றுடன் நிறைவடைகிறது. பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது. மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று மாலை ஐயப்ப விக்கிரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. முன்னதாக நேற்று மதியம் பம்பையை அடைந்த இந்த தங்க அங்கி பம்பை கணபதி கோயிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. பின்னர் ஊர்வலமாக […]
இன்றைய தங்கம் நிலவரம் 26.12.2024
எம்ஜிஆர் நினைவு நாள் | தாம்பரத்தில் அதிமுகவினர் பேரணி

எம்ஜிஆர் நினைவு நாளை ஒட்டி தாம்பரத்தில் அதிமுகவினர் மௌன ஊர்வலம் சென்றனர்
திண்டுக்கல் லியோனி பங்கேற்ற கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி புனித தாமஸ் மலையில் உள்ள தேவாலயத்தில் உலக அமைதிக்காக பிரார்த்தனை நடைபெற்றது.இதில் திண்டுக்கல் லியோனி பங்கேற்றார்
இன்றைய தங்கம் நிலவரம் 25.12.2024
பிளாஸ்டிக் மறுசுழற்சி :தாம்பரத்தில் தொகுப்பு வீடுகள் திறப்பு.

பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி முறையில் 9 லட்சத்தில் அமைக்கப்பட்ட 6 தொகுப்பு விடுகளை தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, ஆணையாளர் சீ.பாலச்சந்தர்,துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் திறந்த்வைத்தனர்
தாம்பரம் துணிக்கடையில் செல்போன் திருடிய பெண் பிக் பாக்கெட் கைது

தாம்பரம் அருகே பிரபல துணிக்கடையில் மூதாட்டி இடம் செல்போன் தொட்டில் ஈடுபட்ட பெண் பிக்பாக்கெட் கைது செய்யப்பட்டார்