லிவ் இன் உறவுகள் குற்றமில்லை – அலகாபாத் உயர் நீதிமன்றம்.
“Adult வயதை எட்டிய இருவர், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது, அவர்களின் தனியுரிமை. சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக குற்றமாகக் கருத முடியாது” லிவ்இன் உறவு முறை சட்ட விரோதமானது இல்லை எனக்கூறி குடும்பத்தினரால் மிரட்டலுக்கு உள்ளாகும் 12 ஜோடிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு.
சூர்யகுமார் யாதவ் கேப்டன்; அக்ஷர் படேல் துணை கேப்டன். இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்தனர்; சுப்மன் கில்லுக்கு இடமில்லை. பிப்ரவரி 7ஆம் தேதி போட்டிகள் தொடக்கம்.
வானிலை முன்னெச்சரிக்கை.குளிர் நீடிக்கும்.
தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விடக் குறைவான வெப்பநிலையே நீடிக்கும். வட தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் இரவு நேரக் குளிர் அதிகமாக இருக்கும். அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை 13°C முதல் 14°C வரை குறைய வாய்ப்புள்ளது. சென்னை நிலவரம்: இன்றும் நாளையும் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் நகரின் சில இடங்களில் இரவு நேர வெப்பநிலை 20°C-க்குக் கீழ் செல்ல அதிக வாய்ப்புள்ளது.
தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடி ஹெலிகாப்டர்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள தாஹேர்பூர் ஹெலிபேடில் பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டர் இன்று (டிச.20) அப்பகுதியில் நிலவிய அடர்ந்த மூடுபனியால் ஏற்பட்ட காட்சித் தெளிவின்மை காரணமாக தரையிறங்க முடியாமல் கொல்கத்தாவுக்கு திரும்பியது. இன்று காலையில் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தாஹேர்பூர் ஹெலிபேட் தளத்தின் மீது சிறிது நேரம் வட்டமிட்ட பிறகு, யூ-டர்ன் அடித்து கொல்கத்தா விமான நிலையத்துக்கே திரும்பியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
களத்தில் இருப்பது யார்?விஜய்க்கு சீமான் பதில்
ஈரோட்டில் பேசிய நடிகர் விஜய் திமுக மட்டுமே தங்களுக்கு எதிரி மத்தவங்களை எல்லாம் களத்தில் இல்லை அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை என்று கூறினார் எது குறித்து சீமானிடம் கேட்டபோது நானும் களத்தில் இல்லாதவர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டார்
இம்ரான் கானுக்கு 17 ஆண்டு சிறை
சவுதி அரேபியா மன்னரிடம் பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது இம்ரான் கானும் அவரை மனைவியும் முறைகேடாக தங்கம் வாங்கி உள்ளனர் இது தொடர்பான வழக்கில் அவர்களுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .இம்ரான் கான் ஏற்கனவே சிறைவாசத்தில் தான் உள்ளார்
சபரிமலை தங்கம் திருட்டு சென்னை தொழில் அதிபர் கைது
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் இதுவரை 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வழக்கு விசாரணையின்போது சபரிமலை ஐயப்பன் கோயில் துவார பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசிய சென்னையை சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி நேற்று கைது செய்யப்பட்டார். துவார பாலகர் சிலைகளில் இருந்து திருடப்பட்ட தங்கத்தை கர்நாடகாவின் பெல்லாரியை சேர்ந்த ஜூவல்லரி உரிமையாளர் கோவர்தன் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். இருவரையும் அதிகாாிகள் […]
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நேற்று மாலை மூலஸ்தானத்தில் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இந்நிலையில், பகல்பத்து உற்சவம் இன்று காலை தொடங்கியது.
டெல்லி பனிமூட்டம் 129 விமானங்கள் ரத்து
வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் தொடர்ந்து கடும் பனிமூட்டம் சூழ்ந்திருந்ததால், பல மாநிலங்களில் விமான, ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் கடும் பனிமூட்டத்தால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 129 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அஸ்ஸாமில் ரயில் மோதி ஏழு யானைகள் பலி
அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று அதிகாலை சைராங் – புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானைக் கூட்டம் மீது மோதியதில் 7 யானைகள் உயிரிழந்தன, ஒரு யானை காயமடைந்தது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.