நடிகர் அஜித் குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது இதனை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தி அது புரளி என்று தெரிவித்தனர்

பவுன் ஒரு லட்சம்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480-க்கும், சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புத்தாண்டு சிறப்பு ரயில் முன்பதிவு

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விரைவு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது; இதற்கான முன்பதிவு இன்று(டிச.22) காலை 8 மணிக்கு தொடங்கியது. உடனடியாக டிக்கெட்டுகள் விந்து தீர்ந்ததால் முன்பதிவு முடிந்து விட்டது.

இந்தியா வந்த மெஸ்ஸிக்கு கிடைத்த ரூ 89 கோடி

இந்தி​யா​வில் சுற்​றுப் ​பயணம் மேற்​கொண்ட அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி​யின் ஜாம்​ப​வான் லயோனல் மெஸ்ஸிக்கு ரூ.89 கோடி வழங்​கப்​பட்​ட​தாகத் தெரிய​வந்​துள்​ளது. கடந்த 13-ம் தேதி கால்​பந்து ஜாம்​ப​வான் மெஸ்ஸி இந்​தி​யா​வுக்கு வருகை தந்​திருந்​தார். கொல்​கத்​தா, ஹைத​ரா​பாத், மும்​பை, டெல்லி ஆகிய நகரங்​களில் அவர் சிறப்பு நிகழ்ச்​சிகளில் கலந்து கொண்​டார்

திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என் காரணமாக விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

மலேசியாவில் விஜய்க்கு கட்டுப்பாடு

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன்படத்தில் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுகிறது வருகிற 27ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்கிறது இந்த நிகழ்ச்சியில் அரசியல் எதுவும் பேசக்கூடாது என்று மலேசியா அரசு கடுமையான கட்டுப்பாடு விதித்துள்ளது

பிரபல மலையாள நடிகர் மரணம்

மலையாள திரையுலகில் நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், பின்னணி குரல் கலைஞர், தயாரிப்பாளர் என பன்முகத் திறனுக்காக அறியப்படும் சீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 69. உடல் நலக்குறைவு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். டயாலிசிஸ் சிகிச்சைக்காக சென்ற போது அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பூணித்துறை தாலுகா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை 8.30 மணி அளவில் அவர் உயிரிழந்தார்

ரூ.3 கோடி பணத்துக்காக பாம்பை கடிக்க வைத்து தந்தையை கொன்ற மகன்கள் கைது

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (56). அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு மோகன்ராஜ் (29), ஹரிஹரன் (26) என்ற 2 மகன்கள். இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மூத்த மகன் மோகன்ராஜ் நெசவுத் தொழிலும், இளைய மகன் ஹரிஹரன் கார் டிரைவராகவும் வேலை செய்து வந்துள்ளனர்.அக்டோபர் மாதம் 22ம் தேதி நள்ளிரவு வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை கட்டுவிரியன் […]

புறாக்களுக்கு உணவளிக்க தடை.

கர்நாடகாவில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவு! பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாலும், சுகாதார சீர்கேடு அச்சுறுத்தல் காரணமாகவும் தடை விதிக்கப்படுவதாகவும், இதை மீறினால் தொற்று நோய்களை பரப்புதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை.