ஒரு லட்சத்தை தாண்டிய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,02,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,770 க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை நேற்று ரூ.1,360 உயர்ந்த நிலையில் இன்று ரூ.1,600 உயர்ந்து விற்பனை ஆகிறது.

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!

சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றதாகக் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது

முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை!

இந்தியாவில் விற்கப்படும் முட்டைகள், மக்கள் சாப்பிட முற்றிலும் உகந்தவை; அவற்றில் புற்றுநோயை உருவாக்கும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளின் கூறுகள் இருப்பதாக பரவும் தகவல் அறிவியல்பூர்வ ஆதாரமற்றது; மக்களைத் தவறாக வழிநடத்தக் கூடியது – இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) விளக்கம்.

கிறிஸ்துமஸ் சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு!

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 23, 24 ஆகிய இரு தினங்களில் சென்னையில் இருந்து மதுரை, கோவை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு. கிளாம்பாக்கத்தில் இருந்து 780, கோயம்பேட்டில் இருந்து 91, மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சென்னை மருத்துவமனையில் கேரள முதல்வர் அனுமதி

கேரள முதல் மந்திரி பிரனாயி விஜயன் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 1000 வழக்கில் உள்ள அந்த மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது

ஊட்டி சாக்லெட் திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்த 210 கிலோ ‘சாக்லெட் மலை’

கிறிஸ்​து​மஸ், புத்​தாண்டை வரவேற்​கும் வகை​யில் ஊட்டியில் சாக்​லேட் திரு​விழா தொடங்​கியது. இதில் இடம்​பெற்ற சாக்​லேட்​டால் செய்​யப்​பட்ட நீல​கிரி மலை பார்​வை​யாளர்​களை வெகு​வாகக் கவர்ந்​தது. 210 கிலோ சாக்​லேட்​டைக் கொண்டு நீல​கிரி மலை போன்ற வடிவம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதை பார்​வை​யாளர்​கள் வெகு​வாக ரசித்​தனர். ரூ.60 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்​பனைக்கு வைக்​கப்​பட்​டுள்ள பல வகை​யான சாக்​லேட்​களை சுற்​றுலாப் பயணி​கள் ஆர்​வத்​துடன் வாங்​கிச் செல்​கின்​றனர்”

சமூக ஒற்றுமையை காப்பேன் -விஜய் உறுதி

தமிழக வெற்றி கழக தலைவர் என்று சமத்துவ கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடினார் இதில் அனைத்து மதங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர் அவரது கட்சி நிர்வாகிகள் பாஸ் வழங்கி . இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் சமூக, மத ஒற்றுமையை 100% காப்பேன் என்று உறுதி கூறினார் மேலும் உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும் என்று அவர் கூறினார்.மேலும் பைபிளில் இருந்து யோசேப்பு கதையை சொல்லி வெற்றி பெறுவோம் என்று கூறினார்

பாஜக பொறுப்பாளர் பியுஷ் கோயல் எடப்பாடி உடன் சந்திப்பு

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார் .அவர் நாளை சென்னை வருகிறார். அப்போது அவரை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் சந்தித்து பேச இருக்கிறார்கள். அவர் முன்னதாக கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் கிண்டி ஓட்டலில் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசுகிறார் அப்போது தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்கிறார்கள்

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

திருப்பரங்குன்றம் தீபத்தூண் பிரச்சனை காரணமாக மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது இந்த நிலையில் நேற்று மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு செல்ல இஸ்லாமியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது இதனால் நாங்களும் மலைக்கு செல்வோம் என்று எச் ராஜா தலைமையில் இந்து அமைப்புகள் முயற்சி செய்தன இதை அடுத்து தற்போது திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது கடுமையான சோதனைக்கு பின்பு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் […]