சிகரெட் விலை உயர்கிறது

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என நிதி அமைச்சகம் தெரிவிப்பு! இதன்படி ஒரு சிகரெட்டின் விலை ரூ.72க்கு விற்கப்படலாம் என்றொரு செய்தி பரவுகிறது

ரஜினி புத்தாண்டு வாழ்த்து

“நான் எப்பவுமே போற ரூட்டை பத்தி கவலை பட்டதே கிடையாது. ஆண்டவன் மேல பாரத்தை போட்டுட்டு வண்டி எந்த ரூட்ல போகுதோ.. அந்த ரூட்ல, ‘சிவா’-ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்..!” ‘முத்து’ திரைப்படக் காட்சியை பதிவிட்டு 2026 புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

குரோம்பேட்டை புருஷோத்தம நகர் ஸ்ரீ சாஸ்தா சேவா சங்கம் சார்பில் விளக்கு பூஜை

குரோம்பேட்டை புருஷோத்தமநகர் ஸ்ரீ சாஸ்தா சேவா சங்கம் சார்பில் 47 ஆம் ஆண்டு லட்சார்ச்சனை வைபவம், புவனேஸ்வரி நகர் ஸ்ரீ அபிராமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து புதன்கிழமை காலை 5:30 மணியளவில் மகா கணபதி ஹோமம் நடந்தது 9 மணி அளவில் திருவிளக்கு பூஜை ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜை வழிபாடு செய்தனர். மாலை 4 மணி அளவில் ஸ்ரீ ஐயப்பனுக்கு […]

சிறுவனுக்கு பாலியல் தொல்லை – சலூன் கடை ஊழியர் கைது

ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அஸ்தினாபுரம் பகுதியில் சலூன் கடை ஊழியர் போக் சோவில் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் அடர்ந்த மூடுபனி காரணமாக 148 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன

டெல்லியில் இன்று அடர் பனிமூட்டத்துக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில், 148 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக அடர் பனிமூட்டம் மற்றும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக டெல்லி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம்!

ஜப்பானை பின்னுக்குத்தள்ளி, உலகின் 4 வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. இதே வேகத்தில் சென்றால், 2030ஆம் ஆண்டிற்குள் ஜெர்மனியை முந்தும் நிலையை இந்தியா எட்டும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2025 : இந்தியாவின் வளர்ச்சியை வரையறுக்கும் ஆண்டு என்ற தலைப்பில் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.18 டிரில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜப்பானை பின்னுக்குத்தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. […]

திருத்தணியில் சிறுவர்களால் தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் முழுமையாக சிகிச்சை பெறாமல் சென்றதில் மர்மம்!

கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வடமாநில இளைஞர் சுராஜ், முழுமையாக சிகிச்சை பெறாமல் சென்றதில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் ஆம்புலன்ஸில் அவருடன் செல்லாமல் போலீஸார் அலட்சியமாக செயல்பட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட வீடியோ வைரலாகி இந்தியா முழுவதும் பரப்பப்பட்டு வருகிறது. இதனை போலீசார் கண்டித்து உள்ளனர். வட மாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று அரசும் உறுதி செய்துள்ளது.

திருச்செந்தூர் கோவிலுக்குள் ஓட்டு கேட்ட விஜய் ரசிகர்கள்

திருச்செந்தூர் கோயில் வளாகத்திற்குள் வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோயிலுக்குள் “தளபதி விஜய்க்கு அரோகரா.. தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரோகரா” என தவெக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், “அடுத்த வருடம் அறநிலையத் துறையைடேக்-ஓவர் செய்து, பாஸ் வழங்குவோம். இந்த மாதிரி வரிசையில் நிற்க அவசியமில்லை’’ எனக்கூறி விஜய்யின் போட்டோவை காட்டி பக்தர்களிடம் வாக்கு சேகரித்தனர்.

முஸ்லிம் பெண்ணை காதலித்து மணக்கும் பிரியங்கா மகன்

முன்​னாள் பிரதமர் ராஜிவ் காந்​தி​யின் மகள் பிரி​யங்கா – ராபர்ட் வதேரா தம்​ப​திக்கு மகன் ரெஹான் (24), மகள் மிரய்யா என 2 பிள்​ளை​கள் உள்​ளனர். இந்​நிலை​யில், ரெஹான் தன்​னுடன் பள்​ளி​யில் பயின்ற வகுப்​புத் தோழி முஸ்​லிம் பெண் அவிவா பெய்க்கை கடந்த 7 ஆண்​டு​களாக காதலித்து வந்​த​தாக தெரி​கிறது. அவி​வா​வின் தந்தை இம்​ரான் தொழில​திபர், தாய் நந்​திதா பெய்க் பிரபல டிசைன​ராக பணிபுரி​கிறார்.பிரியங்கா மகன் திருமண நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெறுகிறது.

சபரிமலை மகர ஜோதிக்கு 35,000 பக்தர்கள் மட்டுமே அனுமதி!

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை யாத்திரைக்காக கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், மகர ஜோதி அன்று 35,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன