திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல் கவர்னரிடம் எடப்பாடி பரபரப்பு புகார்

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாகவும் இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், என்றும் தமிழக கவர்னரிடம் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் கவர்னரை சந்தித்து ஊழல் பட்டியலை கொடுத்து, ஒவ்வொரு துறைகளும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக தனது மனுவில் அவர் கூறியிருக்கிறார்.

கரூர் சம்பவம் – விஜய்க்கு சிபிஐ சம்மன்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் கூட்டத்தில் நெரிசலின் சிக்கி 41 பேர் பலியானார்கள் இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.ஏற்கனவே டெல்லியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் விசாரணை நடந்தது. தற்போது இந்த வழக்கில் நடிகர் விஜய் விசாரிக்கப்படுகிறார். இதற்காக அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,02,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது

வங்கக் கடலில் உருவான புயல் சின்னம்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. தென் கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் இந்திய பெருங்கடல் பகுதியை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம். அறிவித்துள்ளது

முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி – மத்திய அமைச்சர் முருகன்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உறுதி செய்துள்ளது. முருக பக்தர்களின் உணர்வுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தி, டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். நாள்பட்ட இருமல் பிரச்சினைக்காகவும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து […]

தங்கம் விலை உயர்வு

சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து ஆயிரத்து 440 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், கிலோவுக்கு ரூ.8 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி 2.65 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

திமுக ஆட்சியை ஒழித்தே தீருவோம் – அமித்ஷா ஆவேசம்

புதுக்கோட்டை பிரச்சார கூட்டத்தில் உள்துறை மந்திரி அமைச்சர் பேசியதாவது:-அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி இயற்கையான கூட்டணி. 2024இல் அதிமுக, பாஜக இணைந்து போட்டியிட்டு இருந்தால் 26 தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்போம். வரும் நாட்களில் வலுவான கூட்டணியை அமைத்து திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிச்சயம்; திமுக கூட்டணி ஆட்சியை ஒழித்தே தீருவோம் என்று அமித்ஷா பேசினார்