ஆட்சியில் பங்கு ராகுல் காந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்று கேட்டு வருகிறது ஆனால் அவ்வாறு பங்கு தர முடியாது என்று அமைச்சர் ஐ பெரியசாமி நேற்று திட்டவட்டமாக அறிவித்தார் இதனை ஸ்டாலின் சொன்னதாக அவர் கூறினார் இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க ராகுல் காந்தி தமிழககாங்கிரசாரை டெல்லிக்கு அழைத்துள்ளார்

ராமதாசுடன் திமுக பேச்சுவார்த்தை

திமுக கூட்டணியில் சேர்வது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் பேச்சாற்றை நடத்தி வருகிறார் இதே போல ஜான்பாண்டியனும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார் விரைவில் இது பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் கூறினார்

விஜயிடம் சிபிஐ விசாரணை

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை. நடத்துகிறது இந்த விசாரணைக்கு வரும் படி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது . இதற்காக அவர் தனி விமானத்தில் டெல்லி சென்றார். இன்றும் நாளையும் அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதால் விரைவில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வைகோ பாத யாத்திரை இன்று நிறைவு

போதைப்பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, கடந்த 2ம் தேதி திருச்சியில் தொடங்கிய சமத்துவ நடைபயணத்தை மதுரையில் இன்று நிறைவு செய்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஓபுளா படித்துறை பகுதியில் நடைபெறும் நிறைவு விழாவில் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்.பி.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்

எடப்பாடி டெல்லி பயணம்

பாமக உடன் தொகுதி பங்கீட்டை முடிவு செய்த எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை டெல்லி செல்கிறார். நாளை அவர் பாஜக தலைவர்கள் சந்தித்து பேசுகிறார் அப்போது தொகுதி பங்கீடு முடிவாகும் என்று தெரிகிறது.

தங்கம் சவரனுக்கு ரூ.320, வெள்ளி ரூ.12,000 உயர்வு

தங்கம்ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்த நிலையில், ரூ.2,83,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகரும்.

அதிமுக – பாமக கூட்டணி உறுதி! எடப்பாடி பழனிசாமி

செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலுக்காக ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. தற்பொழுது பாமகவும் கூட்டணியில் இணைந்து உள்ளது. இது இயற்கையாக அமைந்துள்ள கூட்டணி. மேலும் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்து விட்டோம். இதற்கான அறிவிப்பை பின்னர் அறிவிக்கிறோம் என்று கூறினார். மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைய உள்ளது. எங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்பத்தின்படி இந்த கூட்டணியை அமைத்து உள்ளோம். வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் […]

அதிமுக ஆட்சியமைக்கும்: அன்புமணி.

வரும் பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இன்று இணைந்துள்ளது. மகிழ்ச்சியான ஒரு தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த விரும்பிய (அதிமுக – பாஜக) கூட்டணியில் நாங்கள் சேர்ந்திருக்கிறோம். வலுவான கூட்டணி. எங்கள் நோக்கம் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திலே அதிமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம். மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்க்கவிருக்கிறோம். காரணம் சமீபத்தில் கூட நடைப்பயணம் மேற்கொண்டபோது திமுக மீது மக்கள் மிகுந்த கோபத்தில் […]

ஆட்சியில் பங்கு கேட்க உறுதியாக இருக்கிறோம். – கே.எஸ் அழகிரி

திரு​வாரூரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரி செய்​தி​யாளர்​களிடம் கூறியது: ஒவ்​வொரு அரசி​யல் கட்​சி​யும் வளர வேண்​டும், அதி​காரத்​தில் பங்கு வேண்​டும் என சொல்​வது நியாய​மானது. இதை காங்​கிரஸ் கட்சி மட்​டும் சொல்​ல​வில்​லை. வைகோ, திரு​மாவளவன் மற்​றும் கம்​யூனிஸ்ட்​களும் அதிக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும் எனக் கூறி​யுள்​ளனர்.