செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலுக்காக ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. தற்பொழுது பாமகவும் கூட்டணியில் இணைந்து உள்ளது. இது இயற்கையாக அமைந்துள்ள கூட்டணி. மேலும் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்து விட்டோம். இதற்கான அறிவிப்பை பின்னர் அறிவிக்கிறோம் என்று கூறினார். மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைய உள்ளது. எங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்பத்தின்படி இந்த கூட்டணியை அமைத்து உள்ளோம். வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியை அகற்றவே இந்த கூட்டணியை அமைத்து உள்ளோம் என்று கூறினார்.