சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் 14-ம் தேதி மகர​விளக்கு பூஜை நடை​பெற உள்​ளது. இதற்​காக கடந்த 30-ம் தேதி மாலை கோயில் நடை திறக்​கப்​பட்​டது. இது​வரை சுமார் 6.5 லட்​சம் பக்​தர்​கள் தரிசனம் செய்​துள்​ளனர். உற்சவ நிகழ்ச்​சிக்கு இன்​னும் ஒரு வாரமே உள்​ள​தால் பக்தர்​கள் கூட்​டம் கடந்த 2 நாட்​களாகவே அதி​கரித்து வரு​கிறது.

சபரிமலை வழித்​தடங்​களில் இது​வரை இல்​லாத கூட்​டம் நேற்று இருந்​தது.எரி​மேலி​யில் இருந்து பெரு​வழிப்​பாதை, பம்​பை, கணபதி கோயில், மரக்​கூட்​டம், அப்​பாச்​சிமேடு, பெரிய நடைப்​பந்​தல் உள்​ளிட்ட பகு​தி​களி​லும் கட்​டுக்​கடங்​காத கூட்​டம் இருந்​தது. குறிப்​பாக சந்​நி​தானத்​தில் இருந்து மரக்​கூட்​டம் வரை ஒதுங்​கக்​கூட இடம் இல்​லாத நிலை​யில் நெரிசல் ஏற்​பட்​டது.