
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திருச்சியில் இருந்து நடை பயணம் தொடங்குகிறார். சமத்துவ நடை பயணம் என்று அறிவித்துள்ளார் இதன் முக்கிய அம்சமாக போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும்.

இந்த நடை பயணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருச்சியில் தொடங்கி வைத்தார் அப்போது போதை பொருட்களை ஒழிக்க மத்திய மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.