பாபா வங்காவின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை . 1996ம் ஆண்டிலேயே இவர் உயிரிழந்துவிட்ட போதிலும், எதிர்காலம் குறித்த இவரது கணிப்புகள் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் பாபா வங்கா இறப்பதற்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். இவருடைய கணிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகி உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.

பாபா வாங்கா 2026ஆம் ஆண்டு நடக்கும் என கூறியுள்ள சில கணிப்புகள்..

ஏலியன்களுடன் மனிதர்கள் தொடர்பு கொள்வார்கள்.

உலகம் முழுவதும் பல பகுதிகளில் மிகப்பெரும் இயற்கை சீற்றங்கள் ஏற்படும்.

பல நாட்டு பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடையும், பல வங்கிகள் திவாலாகும்.

தங்கத்தின் விலையில் வரலாறு காணாத மாற்றம் ஏற்படும்.

மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி செயற்கை நுண்ணறிவு செயல்படும்.

ஆசிய- ஐரோப்பிய நாடுகளில் பெரிய போர் தொடங்கும், இந்த போர் உலக நாடுகளின் எல்லைகளை மாற்றி அமைக்கும்.

பாபா வாங்கா அவரது தீர்க்க தரிசனப்படி அடுத்த ஆண்டுகளில் இந்த பூமியை என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை ஆண்டு வாரியாக எழுதி வைத்துள்ளார். தனது இறப்பு தேதி ஆகஸ்ட் 11, 1996-ல் நடக்கும் என அவர் கணித்ததுபடியே நடந்தது குறிப்பிடத்தக்கது.