
திருச்செந்தூர் கோயில் வளாகத்திற்குள் வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோயிலுக்குள் “தளபதி விஜய்க்கு அரோகரா.. தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரோகரா” என தவெக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், “அடுத்த வருடம் அறநிலையத் துறையை
டேக்-ஓவர் செய்து, பாஸ் வழங்குவோம். இந்த மாதிரி வரிசையில் நிற்க அவசியமில்லை’’ எனக்கூறி விஜய்யின் போட்டோவை காட்டி பக்தர்களிடம் வாக்கு சேகரித்தனர்.