பனையூர் பண்ணையார் தான் பெரும் ஊழல்வாதி – விஜய்க்கு அதிமுக பதிலடி!

“பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். சட்டத்திற்கு விரோதமாக தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி” – அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சித்த விஜய்க்கு அதிமுக பதிலடி

விசிகவில் 20 பேர் தான் இருக்கீங்க: ஆதவ் அர்ஜூனா.

“திருமாவளவன் எவ்வளவு வேண்டுமானாலும் என்னை திட்டிக் கொள்ளட்டும்; ஆனால் உங்க கட்சி இங்க மாறி எவ்ளோ நாள் ஆச்சு; கட்சியில் நீங்களும் ஒரு 20 பேரும் மட்டும்தான் இருக்கீங்க” “எம்.ஜி.ஆர் கூட்டணி கட்சிகளை நம்பி கட்சியை உருவாக்கவில்லை; தாய்க்குலத்தை நம்பிதான் கட்சியை ஆரம்பித்தார். 1977இல் இருந்த சூழ்நிலை இப்பொழுது இருக்கிறது; மக்கள் இரண்டு கட்சிகளையும் நம்பி 60, 70 ஆண்டுகள் ஏமாந்துவிட்டார்கள்.”

தங்கம் விலை அதிரடி உயர்வு… கிராம் ரூ.15 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்.

இன்று தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,200-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.275 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,025-க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாயும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.375-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது

தேசியக்கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர்.

77வது குடியரசு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார். கொடியேற்றியதும் 21 பீரங்கி குண்டுகள் முழங்க, விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டது.

ஆளுநர் ஆர். என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார்

77ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். குடியரசு தின விழாவுக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். குடியரசு தினவிழாவில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள், விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பத்திரப்பதிவு செய்ய வேண்டுமா புதிய தகவல்

பத்திரப் பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்.* மூதாதையர் சொத்தாக இருந்து மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டா சமர்ப்பிக்க வேண்டும். சொத்து அடமானத்தில் இருந்தால், அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அசல் ஆவணங்கள் தொலைந்து போயிருந்தால், காவல் துறையில் புகாரளித்து ‘கண்டறியமுடியவில்லை’ என்ற சான்றிதழ் பெற வேண்டும். மேலும் உள்ளூர் நாளிதழில் விளம்பரம் செய்து அதனையும் தாக்கல் […]

“மங்காத்தா” அலையால்… – மோகன் ஜி வேதனை

திரௌபதி 2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை. மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை. மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை. இந்த சூழலை பயன்படுத்தி, பலர் படம் பார்க்காமல் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். திரைப்படத் துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 வருடங்களை கடந்து வந்துள்ளேன். மக்களின் தீர்ப்பே மகேசன் […]

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு: வீட்டு வாசலுக்கு வரும் 33 கேள்விகள்!

2027-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அதோடு ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்பட உள்ளது. குடிமக்களிடம் மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் 33 கேள்விகளை கேட்கவுள்ளனர். குடிமக்கள் வசிக்கும் வீடுகளின் உரிமையாளா், அதன் பயன்பாடு, வீட்டின் தரை மற்றும் சுவா் கட்ட பயன்படுத்தப்பட்ட பொருள்கள், வீட்டின் தலைமையாளரின் பாலினம், கட்டடத்தின் எண், மக்கள்தொகை வீட்டு எண், வீட்டின் உரிமையாளா் பட்டியலின அல்லது பழங்குடியின அல்லது பிற சமூகத்தைச் சோ்ந்தவரா என்பதை கேட்டறிவார்கள். சமையலறையில் பயன்படுத்தப்படும் எரிவாயு, வீட்டின் […]

நிலைமை மோசமாகும் முன் உடனடியாக கைவிட பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாகும் நடவடிக்கையை துணை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய ஆணையம் (NCAHP) எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவசரமான மற்றும் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என சாடியுள்ளார். நீட் தேர்வு எனும் தவறான நடைமுறையை துணை மருத்துவப் படிப்புகளுக்கும் விரிவுபடுத்துவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். எம்பிபிஎஸ் படிப்பிற்கு நீட் தேர்வை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வரும் […]

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. ஒரே நாளில் இரண்டாவது முறையாக மீண்டும் உயர்ந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.560 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,040 அதிகரித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ஒரே நாளில் ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.365க்கு விற்பனையாகிறது.