டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்

ல்லி அருகே ஃபரிதாபாத்தில் லிப்ட் தருவதாகக் கூறி, 28 வயது பெண்ணை வேனில் ஏற்றி பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசிய கொடூரம். பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரில் விசாரணை நடத்தி சிசிடிவி மூலம் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குர்ஆன் சாட்சியாக பதவியேற்ற நியூயார்க் மேயர்

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமியர் ஒருவர் நியூயார்க் நகர மேயரானார் என்ற வரலாறு படைத்த ஜோரான் மம்தானி, இன்று குர்ஆன் சாட்சியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டு சரித்திரத்தில் இன்னொரு புதிய பக்கத்தை சேர்த்துள்ளார்.

உலக கோப்பை கால்பந்து நடுவர்களாக மூன்று இந்தியர்கள் தேர்வு

உலக கால்​பந்து சம்​மேளன (பி​பா) நடு​வர்​களாக இந்தி​யா​வைச் சேர்ந்த 3 பேர் தேர்​வாகி​யுள்​ளனர். இதுதொடர்​பாக அகில இந்​திய கால்​பந்து சம்​மேளனம் வெளியிட்டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: குஜ​ராத்தை சேர்ந்த ரச்​சனா கமானி, புதுச்​சேரியைச் சேர்ந்த அஸ்​வின் குமார், டெல்​லியைச் சேர்ந்த ஆதித்யா புர்​கயஸ்தா ஆகியோர் பிபா நடுவர்​களாக தேர்​வாகி​யுள்​ளனர். அது​மட்​டுமல்​லாமல் முரளிதரன் பாண்​டுரங்​கன்​(புதுச்​சேரி), பீட்டர் கிறிஸ்​டோபர் (மகா​ராஷ்டி​ரா) ஆகியோர் பிபா உதவி நடுவர்​களாகத் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். இவ்​வாறு அந்​தச் செய்திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.இந்த ஆண்டின் முக்கிய நிகழ்ச்சியாக உலக கோப்பை […]

முதலில் புத்தாண்டை கொண்டாடிய நாடு

‘கிறிஸ்துமஸ் தீவு” எனப்படும் பசிபிக் தீவு நாடான “கிரிபதி”தான் 2026 புத்தாண்டை முதலில் வரவேற்கும் நாடாக இருக்கிறது. சர்வதேச தேதிக் கோட்டிற்கு அருகில் இத்தீவு அமைந்துள்ளதால் கிட்டத்தட்ட ஒருநாள் முன்னதாகவே புத்தாண்டு பிறக்கிறது.இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் சுமார் 3.30 மணிக்கு அங்கு நள்ளிரவை எட்டியதால் உலகிலேயே முதல் நாடாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணத் தேதி

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் காதலித்து வருகிறார்கள். இதனை மறைமுகமாக பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஹைதராபாத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் கலந்துக் கொண்ட திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது

ஜப்பானின் ஸ்மார்ட் கழிப்பறைகள்

ஜப்பானின் புதிய ஸ்மார்ட் கழிப்பறை, உங்கள் கழிவுகளின் வடிவம், நிறம் மற்றும் வேதியியல் மாற்றங்களை ஆய்வு செய்து, முழுமையான ஆரோக்கிய அறிக்கையை நேரடியாக உங்கள் கையடக்க தொலைபேசிக்கு அனுப்பி வைக்கின்றன! இதில் உள்ள சிறப்பம்சங்கள்:செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன சென்சார்கள் மூலம் இவை செயல்படுகின்றன. சிறுநீரைப் பரிசோதிக்கும் வசதி இதில் உள்ளமைக்கப்பட்டுள்ளது. உங்கள் அன்றாட இயற்கை உபாதைகளை வைத்தே, உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் கண்டறியலாம். எதிர்கால மருத்துவ உலகம் உங்கள் வீட்டுக் கழிப்பறையிலிருந்தே தொடங்குகிறது! […]

தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு. சி, டி பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்ச வரம்புக்குட்பட்டு மிகை ஊதியம். ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ரூ.1,000 பொங்கல் போனஸ். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கும் ரூ.1,000 போனஸ்.

2026 மிகவும் ஆபத்தான ஆண்டு…பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்.!

பாபா வங்காவின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை . 1996ம் ஆண்டிலேயே இவர் உயிரிழந்துவிட்ட போதிலும், எதிர்காலம் குறித்த இவரது கணிப்புகள் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் பாபா வங்கா இறப்பதற்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். இவருடைய கணிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகி உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. பாபா வாங்கா 2026ஆம் ஆண்டு நடக்கும் என கூறியுள்ள சில கணிப்புகள்.. […]

தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.99,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.12,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1000 குறைந்து, ரூ.2.56 லட்சத்திற்கு விற்பனை.

பொங்கலுக்கு பிறகு கூட்டணி உறுதியாகும் – நயினார் நாகேந்திரன்

பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கூறியதாவது:- தேசிய ஜனநாயக கூட்டணி பொங்கலுக்கு பிறகு உறுதியாகும் எங்கள் அணியில் ஓபிஎஸ் மற்றும் தினகரன் இணைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றார்.