ஜல்லிக்கட்டை குடும்ப விழா ஆக்குவதா ?-அதிமுக கண்டனம்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை மரபுபடி காலை 7 மணிக்கு தெடாங்காமல் துணை முதல்வர் உதயநிதிக்காக ஒன்றரை மணி நேரம் தாமதப்படுத்தி, போட்டியை காண வந்த மக்களையும், போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள், காளைகள், அதன் உரிமையாளர்களை வேதனைப்படுத்தலாமா? என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்டாலினுக்காகவும் உதயநிதிக்காகவும் நடத்துவது போல் குடும்ப விழா ஆக்குவதா என்று அவர் கேள்வி கொடுத்தார்
பிரேமலதா பிடிவாதத்தால் கூட்டணியில் சிக்கல்
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் தேமுதிக, பாமக-வை விட தங்களுக்கு ஒரு தொகுதியாவது கூடுதலாக வேண்டும் என்று கேட்பதால் அந்தக் கட்சியுடனான கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி நீடிப்பதாகச் சொல்லப்படுகிறது.
கைது பயத்தில் சவுக்கு சங்கர்
பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.சமீபத்தில் ஒரு வழக்கில் கைதாகி ஜாமினில் விடுதலை பெற்றார். தற்போது நேற்று இரவு மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் தன்மீது புதியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதன் பெயரில் தன்னை ஜாமினில் வர முடியாத பிரிவில் கைது செய்ய போலீசார் முயற்சி செய்ததாக கூறியுள்ளார்.
தங்கம் விலை புதிய உச்சம்.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1760 உயர்ந்து ரூ.1,04,960 விற்பனையாகிறது ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.287க்கு விற்பனை ஆகிறது.
முதலில் சுட்டுவிட்டுதான் பேச்சுவார்த்தை!
கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரர்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு வீரர்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவார்கள்; பிறகுதான் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று டென்மார்க் எச்சரித்துள்ளது. கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டம் தீட்டி வரும் நிலையில், அத்தீவை நிர்வகிக்கும் டென்மார்க் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடற்கரை செல்வோர் கவனிக்க…
சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பை கொட்டுவோருக்கு ரூ.5000 அபராதம் – மாநகராட்சி எச்சரிக்கை. நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்; தூய்மையான கடற்கரை அனைவரின் பொறுப்பு எனவும் அறிவுறுத்தல்.
ஆட்சியில் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ.பெரியசாமி.
தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு கிடையாது; கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் முதல்வர் திட்டவட்டமாக உள்ளார். காங்கிரஸ் கேட்பது அவர்களது விருப்பம்; ஆனால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இருந்ததில்லை. – அமைச்சர் ஐ.பெரியசாமி
அயோத்தியில் தடை!
அயோத்தி ராமர் கோயிலின் 15 கி.மீ. சுற்றளவுப் பகுதிகளில் அசைவ உணவுகளை டெலிவரி செய்ய தடை! உணவகங்களில் ஏற்கனவே தடை அமலில் இருக்கும் சூழலில், ஆன்லைன் நிறுவனங்களின் டெலிவரிக்கும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு.
பராசக்தி தோல்வி படம்: திமுகவை சீண்டும் காங்கிரஸ்.
ராகுல் காந்தியின் நெருக்கமான காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பரபரப்பு பதிவு. “செய்தி உண்மையா?பார்த்தவர்கள் வீடியோ போட்டு விடுங்கபா. இந்த பராசக்தி படம் தோல்வி என நண்பர்கள் சொன்னார்கள். ஏன் நம்ம உழைத்த காசை வீணாக்க வேண்டும் என நான் படம் பார்க்கவில்லை.” பராசக்தி படத்தில் கீழ்கண்ட வசனம் இருப்பதாக வந்த செய்தியை பகிர்ந்து மாணிக்கம் தாகூர் இப்படி கேள்வி கேட்டுள்ளார். “தமிழுக்கு பண்ண துரோகத்துக்கு இனி இந்த ஜென்மத்துக்கு நீங்க ஆட்சிக்கே வர முடியாது – […]
அமெரிக்காவின் நலனே எனக்கு முக்கியம்: ட்ரம்ப்.
சர்வதேச சட்ட விதிகளுக்கு நான் கட்டுப்பட்டவன் இல்லை. எனது மனசாட்சியும், சிந்தனையும்தான் என்னுடைய அதிகாரத்தை கட்டுப்படுத்தும். எனக்கு சர்வதேச சட்டங்கள் தேவையில்லை, நான் மக்களைக் காயப்படுத்தவும் நினைக்கவில்லை. அமெரிக்காவின் நலனே எனக்கு முக்கியம்” டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபர்.