அம்மன் கோவிலில் கிடா வெட்டி பிரார்த்தனை நிறைவேற்றிய முஸ்லிம் தம்பதி

பிரார்த்தனை நிறைவேறியதால் முஸ்லிம் தம்பதியர் தஞ்சையில் உள்ள வீரமாகாளியம்மன் கோயிலில் கிடா வெட்டி, பூஜை செய்து 200-க்கும் மேற் பட்டவர்களுக்கு கறி விருந்து பரிமாறி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

திமுக எம்எல்ஏவுக்கு ஜோதிமணி எம்பி எச்சரிக்கை

மதுரை திமுக எம்எல்ஏ கோ.தளபதி காங்கிரஸ் கட்சியையும், கரூர் எம்.பி. ஜோதிமணியையும் விமர்சித்துப் பேசியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து எம்.பி. ஜோதிமணி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பது: திமுக எம்எல்ஏ கோ.தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக் கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள். நான் கரூரில் இருக்கிறேன்.எங்களைத் தொடர்ந்து தாக்கிப் பேசுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று கூறினார்.

சென்னையில் எடப்பாடி பிரச்சாரம் செய்ய அதிமுகவினர் தயக்கம்

அதிமுக பாஜக கூட்டணியில் சென்னை நகரில் உள்ள பெரும்பாலான தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த தொகுதியில் எடப்பாடி பிரச்சாரம் செய்ய நாம் ஏன் செலவு செய்ய வேண்டும் என்ற தயக்கத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு

அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் சிக்கலில் ’ஜனநாயகன்’ – தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்டு

‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. ஐகோர்ட்டு நீதிபதி பி.டி.ஆஷா, “இவ்வாறு மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரைத்தது செல்லாது. ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்” என்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை பெற்றது. பின்னர், இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் […]

போலீஸ் என்கவுண்டர் ரவுடி சுட்டு கொலை

பெரம்பலூர் அருகே போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் கொட்டு ராஜா என்கிற அழகுராஜா என்ற ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டர். முன்னதாக, கடந்த 24-ம் தேதி பெரம்​பலூரில் போலீ​ஸ் வேனில் அழைத்​துச் சென்ற பிரபல ரவுடி வெள்​ளைக் காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்​ற சம்பவத்தில் கொட்டு ராஜா முயற்சித்திருந்தார்அவரை போலீசார் கைது செய்து ஆயுதங்கள் இருந்த இடத்துக்கு கொண்டு சென்றபோது போலீசாரை தாக்கி விட்டு தப்பும் என்றார் அப்போது என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தங்கம் சவரனுக்கு ரூ.520 குறைந்தது.

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.14,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.387-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திமுக ஆட்சிக்கு வராது…

“தமிழகத்தில் இனி எப்போதும் திமுக ஆட்சிக்கு வராது; இந்த தேர்தல்தான் திமுகவிற்கு இறுதித்தேர்தல்” “2021 தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட திமுக நிறைவேற்றவில்லை” – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.