சமூக ஒற்றுமையை காப்பேன் -விஜய் உறுதி

தமிழக வெற்றி கழக தலைவர் என்று சமத்துவ கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடினார் இதில் அனைத்து மதங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர் அவரது கட்சி நிர்வாகிகள் பாஸ் வழங்கி . இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் சமூக, மத ஒற்றுமையை 100% காப்பேன் என்று உறுதி கூறினார் மேலும் உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும் என்று அவர் கூறினார்.மேலும் பைபிளில் இருந்து யோசேப்பு கதையை சொல்லி வெற்றி பெறுவோம் என்று கூறினார்

பாஜக பொறுப்பாளர் பியுஷ் கோயல் எடப்பாடி உடன் சந்திப்பு

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார் .அவர் நாளை சென்னை வருகிறார். அப்போது அவரை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் சந்தித்து பேச இருக்கிறார்கள். அவர் முன்னதாக கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் கிண்டி ஓட்டலில் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசுகிறார் அப்போது தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்கிறார்கள்

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

திருப்பரங்குன்றம் தீபத்தூண் பிரச்சனை காரணமாக மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது இந்த நிலையில் நேற்று மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு செல்ல இஸ்லாமியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது இதனால் நாங்களும் மலைக்கு செல்வோம் என்று எச் ராஜா தலைமையில் இந்து அமைப்புகள் முயற்சி செய்தன இதை அடுத்து தற்போது திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது கடுமையான சோதனைக்கு பின்பு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் […]

நடிகர் அஜித் குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது இதனை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தி அது புரளி என்று தெரிவித்தனர்

பவுன் ஒரு லட்சம்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480-க்கும், சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புத்தாண்டு சிறப்பு ரயில் முன்பதிவு

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விரைவு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது; இதற்கான முன்பதிவு இன்று(டிச.22) காலை 8 மணிக்கு தொடங்கியது. உடனடியாக டிக்கெட்டுகள் விந்து தீர்ந்ததால் முன்பதிவு முடிந்து விட்டது.

இந்தியா வந்த மெஸ்ஸிக்கு கிடைத்த ரூ 89 கோடி

இந்தி​யா​வில் சுற்​றுப் ​பயணம் மேற்​கொண்ட அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி​யின் ஜாம்​ப​வான் லயோனல் மெஸ்ஸிக்கு ரூ.89 கோடி வழங்​கப்​பட்​ட​தாகத் தெரிய​வந்​துள்​ளது. கடந்த 13-ம் தேதி கால்​பந்து ஜாம்​ப​வான் மெஸ்ஸி இந்​தி​யா​வுக்கு வருகை தந்​திருந்​தார். கொல்​கத்​தா, ஹைத​ரா​பாத், மும்​பை, டெல்லி ஆகிய நகரங்​களில் அவர் சிறப்பு நிகழ்ச்​சிகளில் கலந்து கொண்​டார்

திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என் காரணமாக விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

மலேசியாவில் விஜய்க்கு கட்டுப்பாடு

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன்படத்தில் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுகிறது வருகிற 27ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்கிறது இந்த நிகழ்ச்சியில் அரசியல் எதுவும் பேசக்கூடாது என்று மலேசியா அரசு கடுமையான கட்டுப்பாடு விதித்துள்ளது