குரூப் 4 தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றமா? டிஎன்பிஎஸ்சி விளக்கம்!
2026-ல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் – தொகுதி I, II, IIA மற்றும் IV பணிகளுக்கான தேர்வுகள், டிசம்பர் 2024-ல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும். பாடத்திட்டம் மீண்டும் மாற்றப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம்” என டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.
கூட்டணி விரிவாக்கம்? பியூஷ் கோயல் – இபிஎஸ் சந்திப்பு!
திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்துப் பேசி வருகிறார். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. பாஜக மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர். அதிமுக – பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை இணைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று லட்சத்தை எட்ட போகும் தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $4,410 ஆக உள்ளது. தங்கம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $4,410 இலிருந்து $10,000 ஆக உயர்ந்தால், அது தோராயமாக 127% லாபத்தைக் குறிக்கும். இதன் பொருள் தங்கத்தின் விலை தோராயமாக இரண்டரை மடங்கு அதிகரிக்கும். இதற்கிடையில், இந்திய சந்தையில், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) தங்கத்தின் விலை (இன்று தங்க விலை) ரூ.135,890 ஆக உள்ளது. 2029 ஆம் ஆண்டுக்குள் இது 127% […]
ஒரு லட்சத்தை தாண்டிய தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,02,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,770 க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை நேற்று ரூ.1,360 உயர்ந்த நிலையில் இன்று ரூ.1,600 உயர்ந்து விற்பனை ஆகிறது.
முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!
சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றதாகக் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது
பனிமூட்டத்தால் பஸ் மீது மோதிய லாரி
தாம்பரம் அருகே பனிமூட்டம் காரணமாக பஸ் மீது லாரி மோதியது லாரி டிரைவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார்
முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை!
இந்தியாவில் விற்கப்படும் முட்டைகள், மக்கள் சாப்பிட முற்றிலும் உகந்தவை; அவற்றில் புற்றுநோயை உருவாக்கும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளின் கூறுகள் இருப்பதாக பரவும் தகவல் அறிவியல்பூர்வ ஆதாரமற்றது; மக்களைத் தவறாக வழிநடத்தக் கூடியது – இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) விளக்கம்.
கிறிஸ்துமஸ் சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு!
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 23, 24 ஆகிய இரு தினங்களில் சென்னையில் இருந்து மதுரை, கோவை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு. கிளாம்பாக்கத்தில் இருந்து 780, கோயம்பேட்டில் இருந்து 91, மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னை மருத்துவமனையில் கேரள முதல்வர் அனுமதி
கேரள முதல் மந்திரி பிரனாயி விஜயன் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 1000 வழக்கில் உள்ள அந்த மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது
ஊட்டி சாக்லெட் திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்த 210 கிலோ ‘சாக்லெட் மலை’
கிறிஸ்துமஸ், புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஊட்டியில் சாக்லேட் திருவிழா தொடங்கியது. இதில் இடம்பெற்ற சாக்லேட்டால் செய்யப்பட்ட நீலகிரி மலை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. 210 கிலோ சாக்லேட்டைக் கொண்டு நீலகிரி மலை போன்ற வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர். ரூ.60 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பல வகையான சாக்லேட்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்”