TAMBARAM DEC 21 TO DEC 27 VOLUME 13 ISSUE 36
CHROMPET DEC 21 TO DEC 27 VOLUME 13 ISSUE 36
திருமாவளவன் கட்சியை கலைத்தால் நான் 10 ஆயிரம் பேருக்கு சோறு போடுகிறேன்’’நடிகை கஸ்தூரி
தீபம் ஏற்றிவிட்டால் எய்ம்ஸ் வருமா, சோறு கிடைக்குமா என கேட்கிறாரே திருமாவளவன், சந்தனக்கூடு நடப்பதால் சோறு கிடைக்குமா என கேட்பாரா? அவர் கட்சியை கலைத்தால் நான் 10 ஆயிரம் பேருக்கு சோறு போடுகிறேன்’’திருப்பரங்குன்றத்தில் நடிகை கஸ்தூரி
திமுக கூட்டணியை தோற்கடிப்போம்-பியூஷ் கோயல்
நண்பரும் சகோதரருமான பழனிசாமியுடன் பேசியது மகிழ்ச்சி-தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் வளர்ச்சி, வேலைவாய்ப்பே பாஜக கூட்டணியின் பிரதான இலக்கு. 2026 தேர்தலை மோடியின் வழிகாட்டுதலுடன்தன்னமிக்கையுடன் எதிர்கொள்வோம். 2026- தேர்தலில் ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்-தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்
NDAகூட்டணிக்குள் ஓபிஎஸ், டிடிவி?
NDA கூட்டணியில் பாஜகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்க அதிமுக சம்மதம் தெரிவித்ததாக தகவல்; 170 – அதிமுகவும்,பாஜக-23,பாமக-23,தேமுதிக-6,அமமுக -6தமாக -3ஓபிஎஸ் -3 என புதிய பட்டியலை மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் இபிஎஸ் வழங்கியதாக தகவல்
மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற பேச்சுவார்த்தை – எடப்பாடி பழனிசாமி பேட்டி
நீண்ட இடைவெளிக்கு பிறகு மத்திய மந்திரி பியூஷ்கோயலை சந்தித்து பேசினோம். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து எப்படி செயல்படுவது என்பது குறித்து ஆலோசித்தோம். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம்- எடப்பாடி பழனிசாமி பேட்டி திமுக ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். சட்டசபை […]
அதிமுக 170 தொகுதிகளில் போட்டி..???
தேசிய ஜனநாயக கூட்டணியில் 170 இடங்களில் போட்டியிடும் வகையில் அதிமுக வியூகம் வகுத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் பாமக, தேமுதிகவுடன்d பேச்சுவார்த்தை நடத்தும் பணியை அதிமுக மேற்கொள்ளும் எனவும், டிடிவி தினகரன், OPSடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியில் இணைக்கும் பணியை பாஜக மேற்கொள்ளும் என தகவல்
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் கூடாது!
தமிழ்நாட்டில் இன்றுடன் அரையாண்டு தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது! இசை, நடனம் மற்றும் ஒவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் இவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும்! கடல், ஆறு, ஏரி, குளம், குட்டையில் மாணவர்கள் குளிப்பதை பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம்! – பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தல்
பங்குச் சந்தை முதலீட்டில் பெண்கள் பங்கு 25% அதிகரிப்பு
இந்திய பங்குச் சந்தையில் பெண் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரித்துள்ளதாக தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) தலைமைச் செயல் அதிகாரி ஆஷிஷ் சவுகான் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இதில் கடந்த 10 ஆண்டில் ஆண்டுக்கு சராசரியாக 25% அதிகரித்துள்ளதாக (2.5 கோடி) அவர் தெரிவித்துள்ளார். “நாட்டில் உள்ள 99.85% அஞ்சல் குறியீட்டெண் (பின்கோடு) வட்டத்தில் வசிப்பவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை 12.2 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 4-ல் ஒருவர் பெண் ஆவர். மேலும் […]
நாளைமுதல் பள்ளிகளுக்கு விடுமுறை!
சென்னை: தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், புதன்கிழமை முதல் ஜன. 4 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.