தங்கம் விலை பவுனுக்கு 80 உயர்வு
சென்னையில் இன்று (நவ., 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,310க்கு விற்பனை ஆகிறது.
வீடு தேடி வரும் ரேஷன் பொருள் – வயது வரம்பு குறைப்பு
தமிழக அரசு தாயுமானவன் என்ற திட்டத்தின் கீழ் முதியோர் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டு வருகிறது தற்போது எந்த வயது வரம்பை குறைத்து 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வீட்டுக்குச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது
வணிக சிலிண்டர் விலை குறைப்பு
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1,750-க்கு விற்பனை வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இன்றி ரூ.868.50க்கு விற்பனை செய்யப்படுகிறது
9 சட்டங்களுக்கு கவர்னர் ஒப்புதல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல். அளித்தார் 2 முறை நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதாவுக்கும் ஆளுநர் ரவி ஒப்புதல். அளித்து உள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ ஓய்வூதியத்தை உயர்த்துவது சிறு குற்றங்களுக்கு சிறைத் தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உள்பட 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார்
சென்னையில் கடலில் மூழ்கி 4 பெண்கள் உயிர் இழப்பு
சென்னை எண்ணூர் கடற்கரையில், கல்லூரி மாணவி உட்பட 4 பெண்களின் உடல்கள் ஒரே நேரத்தில், கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. 4 உடல்களையும் மீட்ட போலீசார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். போலீஸாரின் முதற்கட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களில் ஷாலினி (வயது -18) என்பவர் தனியார் கல்லூரி மாணவி தேவகி பவானி காயத்ரி ஆகிய 3பேரும் ஜவுளிக்கடையில் பணியாற்றுபவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரை பகுதியில் 4-பேரும் சென்றதால் கடல் அலையில் சிக்கி […]
கெஜ்ரிவாலுக்கு பஞ்சாபில் சொகுசு மாளிகை
பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டு அறிக்கையில்,ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் தன்னை சாமானிய மனிதர் என்று கூறி நடித்து வருகிறார். ஆனால் அவர் டெல்லியில் தனக்காக பிரம்மாண்ட சீஷ் மஹாலை உருவாக்கினார். அந்த மாளிகையில் இருந்து வெளியேறிய பிறகு தற்போது பஞ்சாபின் சூப்பர் முதல்வராக அவர் செயல்பட்டு வருகிறார். தற்போது டெல்லி மாளிகையைவிட சண்டிகரில் 7 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஆடம்பர மாளிகை அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இது கேஜ்ரிவாலின் சீஷ் மஹால் 2.0 ஆகும். […]
கரூர் சம்பவம். அஜித்பர பரப்பு பேட்டி
கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல; நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு. கூட்டம் திரட்டுவதை பெரிய விஷயமாக்குவதை நிறுத்த வேண்டும். கிரிக்கெட்டில் கூட்டம் கூடினாலும் இப்படி நடப்பதில்லை.தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி,பிரபலங்கள் கலந்துகொள்ளும்நிகழ்வுகளில் மட்டும் ஏன் இப்படி? இது நம் திரையுலகை உலகளவில் தவறாகக் காட்டுகிறது. ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம். […]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா நவம்பர் 17ஆம் தேதி ஆரம்பம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா நவம்பர் 17ஆம் தேதி ஆரம்பமாகிறது. இதற்கான கோயில் நடை நவம்பர் 16ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. பக்தர்கள் கோயிலுக்கு வர சுவாமி தரிசனம் பெற ஆன்லைன் முன்பதிவு கட்டாயம். இந்த முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. தற்போது முன்பதிவு செயலியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரிசன தேதி மற்றும் நேரத் தேர்வு, காலநிலை தகவல், அவசர உதவி, மருத்துவ சேவை உள்ளிட்ட பல வசதிகளுடன் இந்த புதிய […]
“தொழிலாளர்களை மோசமாக நடத்தும் காங்., தி.மு.க.”பிரதமர் மோடி விமர்சனம்
வெளிமாநிலங்களில் உள்ள பீகார் மாநில புலம்பெயர் தொழிலாளர்களை காங்கிரஸ் உள்பட இண்டியா கூட்டணி கட்சிகள் அவமதித்து வருவதாக பிரதமர் மோடி விமர்சனம். தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மாநிலத்தவர்களை தி.மு.க.வினர் மோசமாக நடத்தியதாகவும் குற்றச்சாட்டு.
ஆன்ட்ரூ-வின் ‘இளவரசர்’ பட்டத்தை இங்கிலாந்து மன்னர் சார்லஸ் பறித்தார்.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சகோதரர் ஆன்ட்ரூவின் ‘இளவரசர்’ பட்டத்தை இங்கிலாந்து மன்னர் சார்லஸ் பறித்தார். இளவரசர் பட்டத்தை பறித்தது மட்டும் அல்லாமல் ஆன்ட்ரூவை மாளிகையை விட்டும் வெளியேற்றினார். அரச குடும்பத்தில் முன்னெப்போதும் நடந்திராத நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.