சாம்பியன் பட்டம் என்ற கிரிக்கெட் அணிக்கு 125 கோடி பரிசு
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியனான இந்திய அணிக்கு ரூ. 40 கோடி பரிசுத்தொகை வழங்கப்படவுள்ள நிலையில், பிசிசிஐ தரப்பில் ரூ.125 கோடி பரிசாக வழங்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, வெற்றிபெற்ற இந்திய அணியின் வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்தப் போட்டியை தொலைக்காட்சி மூலம் 21 கோடி பேர் பார்த்துள்ளனர்
மகளிர் உலகக் கோப்பை! முதல்முறை பட்டம் வென்ற இந்தியா!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி அடைந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை மாலை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் கிரிக்கெட் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணியின் வீராங்கனைகள் 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து […]
ஜாக்டோ -ஜியோ நம்பர் 18 இல் போராட்டம்
அரசு ஊழியர் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நிர்வாக குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது அப்போது.18ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்தனர்
தமிழகத்தை மீட்போம் -விஜய்
இன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுவது எட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார் அதேபோல தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யும் வெளியிட்டுள்ள செய்தியில் மக்கள் துணையோடு தமிழகத்தை மீட்போம் என்று குறிப்பிட்டுள்ளார்
அஜித் கையில் பிளேடால் கிழித்த ரசிகர்
நடிகர் அஜித்குமார் வெளிநாட்டு பத்திரிகை அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதில் அவர் கூறியதாவது:- ரசிகர்கள் அன்பை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், எல்லாரும் என் ரசிகர்கள் என்று நான் எப்படி நம்ப முடியும்? ஏன் இதை சொல்கிறேன் ப என்றால் ‘2005ல் நான் காரில் சென்று கொண்டு இருந்த போது ரசிகர்கள் சுற்றி நின்று இருந்தனர். அப்போது கண்ணாடியை திறந்து அவர்களுக்கு கை கொடுத்தேன். கொஞ்சம் நேரம் கழித்து பார்த்தால் கை முழுவதும் ரத்தம். […]
ஸ்மார்ட்போனுக்கு பதில் டைல்ஸ் அனுப்பிய அமேசான்
பெங்களூரு சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் அமேசானில் ரூ. 1.87 லட்சம் மதிப்புள்ள Samsung Galaxy Fold 7 போனை ஆர்டர் செய்கிறார் ஆர்டர் வந்ததும், அதைபிரிக்கும் போது போனுக்கு பதிலாக ஒரு டைல்ஸ் துண்டு இருப்பை கண்டு அதிர்ச்சியடைந்தார். சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டலிலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார் வீடியோ ரிக்கார்ட் மூலம் அன்பாக்ஸ் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
எடப்பாடி மீது செங்கோட்டையன் சரமாரி குற்றச்சாட்டு
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பரபரப்புப் பேட்டி அளித்திருக்கிறார். ‘’எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கு பரிந்துரை கடிதத்தை கொடுத்தவன் நான். கொடநாடு கொலை வழக்கில், A1-ல் இருக்கிறார் இபிஎஸ். பழனிசாமி எடுத்த முடிவுகளால் அதிமுக தொடந்து தோல்வியைத் தழுவியது. எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்கலாம்’’ என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.
ரோனோல்டா மகன் போர்ச்சுக்கல் அணியில் சேர்ப்பு
16 வயதுக்குட்பட்டோர் போர்ச்சுகல் கால்பந்து அணியில், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் இடம்பெற்று விளையாடினார். கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மூத்த மகன் கிறிஸ்டியானோ டாஸ் சான்டோ என்று அழைக்கப்படும் கிறிஸ்டியானின்ஹோ கால்பந்து பயிற்சி பெற்று உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
தமிழ்நாட்டில் வெப்பநிலை உயர வாய்ப்பு
கிழக்கு திசை காற்று தடைபட்டு தற்போது வறண்ட மேற்கு திசை காற்று வீசுகிறது மேலும் கடல் காற்று உள் நுழைவதும் தடை பட்டதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்திருக்கிறது.இன்று முதல் தமிழ்நாட்டின் வெப்பநிலை இயல்பை விட 4°©️ வரை உயரும் என கணிக்கப்படுகிறது. குறிப்பாக சென்னை முதல் குமரி வரை உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும். அடுத்த 5 நாட்களுக்கு சென்னை மதுரை திருச்சி நெல்லை விருதுநகர் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் […]
பந்து தாக்கியதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் வீரர் உயிரிழந்ததைத் தொடர்ந்து சர்வதேச 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணியினர் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர். இந்தப் போட்டி மெல்பர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மெல்பர்ன் நகரைச் சேர்ந்த 17 வயது இளம் வீரரான பென் ஆஸ்டின் என்பவர், பெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்பில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது கழுத்துப் பகுதியில் பந்து அதிவேகமாகத் தாக்கியது. இதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 நாள் தீவிர […]