வட மாவட்டங்களில் அதி கனமழை..!
வருகிற 12-ந் தேதிக்கு பிறகு கிழக்கு திசை காற்று தமிழக பகுதிகளுக்குள் வருகிறது. இதனைத்தொடர்ந்து 15-ந் தேதியில் இருந்து மீண்டும் பருவமழை தீவிரம் அடையும். அதனையடுத்து 4-வது வாரத்தில் அதாவது 23-ந் தேதி முதல் 30-ந் தேதிக்கு இடைபட்ட நாட்களில் புயலுக்கான வாய்ப்பு உள்ளதாகவும், இந்த புயலினால் வட மாவட்டங்களில் அதி கனமழை வரை பெய்து, மழைப்பாதிப்பை கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
35 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை
வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய 3 விசைப் படகுகளும், ஒரு நாட்டுப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி தமிழகத்தைச் சேர்ந்த 74 மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த பல ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட 242 மீன்பிடிப் படகுகளும் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
ராஜஸ்தான் மாநிலத்தில் பஸ் விபத்தில் 15 பக்தர்கள் பலி
ராஜஸ்தான் மாநிலத்தில் லாரி மீது பேருந்து மோதியதில் 15 பக்தர்கள் உயிரிழந்தனர்.கோலாய்ட் ஆலயத்திற்கு சென்று திரும்பியபோது பலோடி மாவட்டத்தில் நின்றிருந்த லாரி மீது பேருந்து மோதி இந்த விபத்து நடந்துள்ளது
விஜய் கட்சியில் மகளிர் அணி நிர்வாகிகள் நியமனம்
தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளன முதல்கட்டமாக கட்சி ரீதியிலான 65 மாவட்டங்களுக்கு அமைப்பாளர்கள் ஒரு மாவட்டத்துக்கு ஒரு அமைப்பாளர் பத்து துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
தெலுங்கானா பேருந்து விபத்து 24 பயணிகள் உயிரிழப்பு
தெலுங்கானாவில் அரசு பேருந்து மீது கருங்கல் ஜல்லி இயக்கி வந்த டிப்பர் லாரி மோதியது இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உள்பட 24 பயணிகள் பலியானார்கள் .விபத்தில் சிக்கியவர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்க தெலுங்கானா முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
அனில் அம்பானியின் சொத்து முடக்கம்.
பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.3,084 கோடி சொத்துகள் முடக்க பட்டன வங்கிகளிடம் பெற்ற கடன்களை தவறாக பயன்படுத்தியதற்காக நிலங்கள், பங்குகள், வங்கிக்கணக்கு உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை. எடுத்து உள்ளது.
தங்கம் விலை உயர்ந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.90,800 விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.11,350க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.168க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிகாரில் குளத்தில் குதித்து மீன்பிடித்த ராகுல்
பிஹாரில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. கடுமையான தேர்தல் பணிகளுக்கு இடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெகுசராய் என்ற இடத்தில் உள்ளூர் மக்களுடன் இணைந்து குளத்தில் இறங்கி மீன்டிபிடித்து மகிழ்ந்தார். படகு மூலமாக குளத்துக்குள் சென்ற ராகுல் தண்ணீரில் குதித்து நீச்சல் அடித்தார். அப்போது விகாஸ்ஷீல் கட்சியின் (விஐபி) நிறுவனர் முகேஷ் சாஹ்னி உடனிருந்தார்.
பிஹாரில் மீண்டும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி – கருத்துக் கணிப்பில் தகவல்
பிஹார் தேர்தல் குறித்து ஜேவிசி நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டு உள்ளது. பிஹார் தேர்தலில் 122 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி அறுதிப் பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்கும். இதில் பாஜக 70 முதல் 81 தொகுதிகளை கைப்பற்றும். அந்த கட்சி பிஹார் தேர்தலில் அதிக இடங்களை பெறும் கட்சியாக இருக்கும். ஐக்கிய ஜனதா தளத்துக்கு 42 முதல் 48 இடங்கள் கிடைக்கும். லோக் ஜன சக்தி – ராம் விலாஸ் கட்சிக்கு 5 […]
பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டை
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டை வழங்குவதை பல அரசு ஆஸ்பத்திரிகள் செயல்படுத்தி வருகின்றன. இதை பல ரெயில்வே ஆஸ்பத்திரிகளும் செய்து வருகின்றன. அந்தவகையில் தென்கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் முதல் முறையாக ஜார்கண்ட் சக்ரதார்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டு உள்ளது. மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள இந்த ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் பிறந்த 4 குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டையும், பிறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டது.