மேயா், ஆளுநா் தோ்தல்கள்: டிரம்ப்புக்கு பின்னடைவு

அமெரிக்காவின் நியூயாா்க், சின்சினாட்டி நகரங்கள், விா்ஜீனியா, நியூஜொ்சி மாகாணங்களில் முக்கியப் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தோ்தல்களில் எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். இது, அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு அரசியல் ரீதியில் ஏற்பட்டுள்ள முதல் மிகப் பெரிய பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது. இதில், நியூயாா்க், சின்சினாட்டி நகர மேயா் தோ்தல்களிலும், விா்ஜீனியா துணை ஆளுநா் தோ்தலிலும் இந்திய வம்சாவளி இஸ்லாமியா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

முதல்வர் வேட்பாளர் விஜய் பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழக வெற்றி கழக பொதுக்குழு இன்று நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தல் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் கூட்டணி குறித்தும் மற்ற தேர்தல் அணுகுமுறை குறித்தும் முடிவு செய்ய விஜய்க்கு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

பிரியாணி விளம்பரம் -துல்கர் சல்மானுக்கு சம்மன்

கேரளாவில் நடிகர் துல்கர் சல்மான் விளம்பர தூதராக உள்ள நிறுவனத்தின் பிரியாணி அரிசி தரமில்லை என கேட்டரிங் நிறுவனம் வழக்கு போட்டு உள்ளது. திருமண விழாவில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு என கேட்டரிங் நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது டிசம்பர் 3ம் தேதி துல்கர் சல்மான் நேரில் ஆஜராக கேரள நுகர்வோர் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

டிரம்ப் எதிர்ப்பாளர் நியுயார்க் மேயர் ஆனார்

நியூ யார்க் நகர மேயராக சோக்ரான் மம்தானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, நியூ யார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர். தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் மேயர். ஆப்பிரிக்காவில் பிறந்த முதல் மேயர். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நியூ யார்க் நகரத்தின் மிக இளைய மேயர் (34 வயதில்). இவர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ (Andrew Cuomo) மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவா […]

சுங்கச்சாவடி அருகே கிடந்த சிறுத்தை

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே தலையில் அடிபட்டு இறந்த நிலையில் சாலையோரம் சிறுத்தை கிடந்தது.வனப்பகுதியே இல்லாத இடத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது எப்படி என சிறுத்தையின் சடலத்தை கைப்பற்றி வனத்துறை மற்றும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அன்புமணி ஆதரவாளர்கள் 25 பேர் மீது வழக்கு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருள் எம்.எல்.ஏ-வை தாக்கிய சம்பவத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் 25 பேர் மீது ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்புமணி ஆதரவாளர் ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், ராமதாஸ் ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தத்தால் தமிழகம் பீகாராக மாறும் – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியதாவது:- எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் பாஜக தேவையற்ற வேலை​யைச் செய்​கிறது. மக்​களை பதற்​ற​மாகவே வைத்​திருக்​கப் பார்க்​கி​றார்​கள். அப்​போது​தான் செய்​கிற தவறு வெளியே தெரி​யாமல் இருக்​கும். ஆவணங்​கள் கொடுக்​க​வில்லை என்​றால் பெயர்​களை நீக்​கு​வோம் என தேர்​தல் ஆணை​யம் இப்​போது தெரிவிக்​கிறது. இரண்டு மாதத்​தில் தேர்​தலை வைத்​துக் கொண்டு என்ன ஆவணங்​களை கொடுக்க முடி​யும்? பிஹார் போன்ற வட மாநிலங்​களில் இருந்து தமி​ழ​கம் வந்​தவர்​களுக்கு வாக்​குரிமை வழங்க இந்த வேலை​யைச் செய்​கி​றார்​கள். அப்​படி வழங்​கும் […]

பீகாரில் நாளை முதல்கட்ட தேர்தல்

பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அந்த மாநிலத்தில் நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பிச்சாவரத்தில் அரிய வகை பொன்நிற குள்ள நரிகள்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுரபுன்னை காடுகளில் அரிய வகை பொன்நிற குள்ள நரிகள் அதிகம் உள்ளதை வனத் துறையினா் கண்டறிந்துள்ளனா். இந்த சுரபுன்னை காடுகளில் நீா்நாய் மற்றும் பொன்னிற குள்ள நரிகள் அதிகளவில் உள்ளது வனத் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. இவைகள் மீன், நண்டு, இறால் போன்றவற்றை உண்டு வாழ்கின்றன. குள்ள நரிகள் அலையாத்திக் காடுகளின் தூய்மைப் பணியாளராக கருதப்படுகின்றன.